கொழும்பில் துப்பாக்கிச் சூடு; மாநகர சபை உறுப்பினர் பலி.!
கொழும்பு, செட்டியார் தெருவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நவோதயா மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை யின் சுயேட்சைக் குழு உறுப்பினரு மான 40 வயதுடைய கிருஷ்ணா என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் என்பவரே உயிரிழந் துள்ளார்.
செட்டியார்தெரு பகுதியிலிருந்த அவரது பழக்கடையில் வியாபார நடவடிக் கையில் ஈடுபட்டிருந்தபோதே மோட்டார் சைக்களில் வந்த ஆயுத தாரியொரு வர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று காலை 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதனை யடுத்து இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட நிலை யில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேக தெரிவித்தார்.