விஜயகலா மூலம் தனது நோக்கங்களை தனதாக்கிய மகிந்த!
2015-ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஹம்பாந் தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்த சீனா ஹார்பர் நிறுவனம் வழங்கிய தாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இச் செய்தி தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படு த்தியிருந்ததோடு அரசியல் களத்தி லும் பெரும் பேசுபொருளாக அமைந் திருந்தது, இது குறித்து மஹிந்த ராஜ பக்ச மறுப்புக்களை தெரிவித்து வந்த நிலையிலும் குறித்த விடயம் தொடர் பான சர்ச்சைகள் ஓய்ந்த பாடில்லை.
இதனால் தொடர்ந்து தென்னிலங்கையில் மக்கள் மத்தியிலும், அரசியல் வட் டாரத்திலும் பரபரப்பு நிலவி வந்த நிலையில் தான், யாழ்ப்பாணத்தில் கடந்த யூலை 2 ஆம் திகதி திங்கட்கிழமை “உத்தியோகபூர்வப் பணி” ஜனாதிபதி மக் கள் சேவை என்ற தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் 8ஆவது நிகழ்வு யாழ் வீர சிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இந் நிகழ்வில் உரையாற்றிய சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ் குடாநாட்டில் தீவிரமடைந்துள்ள போதைப்பொருள் பாவணை, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் கடும் ஆத்திரம் வெளியிட்டதுடன், தமிழீழ விடு தலைப் புலிகளின் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை.
என்பதையும் சுட்டிக்காட்டியதோடு, உண்மையிலேயே 2009 மே 18 க்கு முதல் நாங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என் பதை ஒவ்வொருத்தரும் உணர்வுபூர்வமாக உணர்கின்றோம் என தெரிவித் துள்ளாா்.
அத்துடன் உண்மையிலேயே இன்றைய நிலை தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும் என்பது எங்களது முக்கிய நோக்கம். நாங்கள் உயி ருடன் வாழ வேண்டும் என்றால் நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்க வேண் டுமானால்,
எங்களது பிள்ளைகள் நிம்மதியாக கல்வி கற்பதற்கு பாடசாலைக்கு சுதந்திர மாகச் சென்று வீடு திரும்ப வேண்டுமானால் வடக்கு கிழக்கிலே தமிழீழ விடு தலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும்” என்று சிறுவர் மற்றும் மகளீர் விவ கார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மிகவும் ஆவேசத்துடன் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் நடந்து வரும் பாலியல் வன்முறைகள், வாள்வெட்டு காலாசாரம் போன்ற சம்பவங்களால் யாழில் மக்கள் நின்மதியிழந்திருக்கின்றனர், இச் சம்பவங்களை மனதில் வைத்து இதை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மக்களின் மன ஓட்டங்களை புரிந்துகொண்டு அவர் இவ்வாறு பேசியிருக்கின் றார்.
என்பது சாதாரண குடிமகனுக்கே விளங்கும் போது பல சூழ்ச்சிகளை புரிந்து வரும் மகிந்த உட்பட்ட சிங்கள இனவாத அரசியலை முன்னெடுத்து வரும் அர சியல் தலைவர்களுக்கு விளங்காத?
இருந்தும் தங்களது ஹார்பர் நிறுவன சர்ச்சை, சகோதரங்களுக்கிடையிலான முரண்பாடுகளை மறைப்பதற்கு, இனவாத அரசியலை முன்னெடுப்பதற்கு, தற் போதைய அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்குகின்றது, விடு தலைப்புலிகளை உருவாக்க முயல்கின்றது.
என்ற மாயையை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கி மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக காத்திருந்த அவர்களின் கையில் கிடைத்த நபர்தான் விஜயகலா மகேஸ்வரன்.
இந் நிலையில் தான் விஜயகலா மகேஸ்வரன் ஆதங்கத்தில் கூறிய மேற்படி கருத்தை திரிவுபடுத்தி, நாடாளுமன்றத்தில் சர்ச்சைகளை கிளப்பி, தங்களது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு இலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தி அவர் களின் நோக்கத்தை, திட்டத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
மேலும் விடயம் தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் முன்னெடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற் றுள்ள விடயமாகும்.