ரஷ்யாவின் வான் தாக்குதலில் 10 பேர் பலி.!
சிரிய முகாம்கள் மீது ரஷ்யா படையினர் நடத்திய வான் தாக்குதலினால் பொதுமக்கள் 10 பேர் உயரிழந்துள்ளதுடன் மேலும் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்படும் சிரிய மக்க ளுக்கான உதவும் அமைப்பு ஒன்று தெரி விக்கையில்,
சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் நடைபெறும் சிரிய அரசுப் படைகள் மற் றும் ரஷ்யப் படைகள் தாக்குதல் காரண மாக குறித்த பகுதியிலிருந்து வெளியேறிய பொது மக்கள் சிரியாவின் தென் மேற்குப் பகுதியிலுள்ள ஐன் எல்-தினா கிராமத்திலும் ஒரு பள்ளியிலுள்ள முகாம்களிலும் தங்கியுள்ளனர்.
இந் நிலையல் குறித்த முகாம்கள் மீது ரஷ்ய படையினர் நடத்திய வான் வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததுடன் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள் ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் அசாத் துக்கும் சுன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே யுத்தம் நடைபெறுவதுடன் அசாத்துக்கு உதவியாக ரஷ்ய படைகள் தாக்குதலை முன்னெடுத்துள்ளனா்.