Breaking News

வடக்கு மாகாணம் தற்போது தனி நாடாக மாறிவிட்டது!!?

வடக்கு பகுதி தற்போது தனி நாடாக மாறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

காலஞ்சென்றுள்ள முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் வீ.கே.இந்திகவின் உட லுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் வெளி யில் கூடியிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

மேலும் கூறுகையில், 

வடக்கில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தெற்கில் அப்படியான அனுஷ்டிப்புக்களை செய்தால், அரசாங்கம் அவர்களை கைது செய்திருக்கும். வடக்கு தற்போது தனி நாடாக மாறியுள்ளது. தெற்கில் இப்படி ஏதாவது நடவ டிக்கைகளில் ஈடுபட்டால் பிடித்து சிறையில் அடைத்து பிணை வழங்காது தடு த்து வைத்திருப்பார்கள். 

 அதேவேளை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன் றத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். அவர் தனது வாக்குறுதியை நிறைவேற் றிய பின்னர், மறுநாள் நான் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் தெளிவுப்படுத்துவேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்து ள்ளார்.