விஜயகலாவுக்கு வைகோ தெரிவித்த கருத்து.!
விடுதலைப்புலிகள் அமைப்புத் தொடர்பாக கருத்துரைத்து அமைச்சர் பத வியை இழந்த விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக மதிமுக பொதுச் செய லாளர் வைகோ கருத்துரைத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் அறி க்கை ஒன்றையும் வெளியிட்டுள் ளார்.
இலங்கைத்தீவில் வடக்கு மாகா ணத்தில் தமிழர்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் அதிகரித்து விட்ட ஆதங்கத்தில் தமிழ் ஈழ விடு தலைப் புலிகள் மீண்டும் எழுந்து வந் தால் தான் இக் குற்றங்களைத் தடுக்க முடியும்.
தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும் என விஜயகலா மகேஸ்வரன் குறிப் பிட்டார்.
ஆனால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அமைச்சருக்கு எதிராக கடு மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கூச்சலிட்டனர். ஐக்கிய தேசியக் கட்சி யும் தங்கள் கட்சியின் சார்பில் அமைச்சர் பொறுப்பில் இருந்த விஜயகலா வுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்ததால் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளாா்.
எனினும் அமைச்சர் விஜயகலா பேசியதுதான் இலங்கைத் தமிழர்களின் எண் ணமும் உணர்வும் ஆகும். கிரேக்க புராணத்தில் சாம்பல் குவியலில் இருந்து பீனிக்ஸ் பறவை விண்ணில் எழுந்தது போல இன்றைய இளைய தலை முறை யினரால் தமிழர்கள் விரைவில் காப்பாற்றப்படுவார்கள் என்பதே வரலாற்றில் எழுதப்படப் போகும் பாடம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.