வாகனக் கதவில் மோதி மாணவன் உயிரிழப்பு.!
தரித்து நின்ற வாகனக் கதவினை சாரதி அவதானமின்றி திறந்தமையினால் அவ் வழியாக சைக்கிளில் பாடசாலைக்குச் சென்ற மாணவன் ஒருவன் வாக னக் கதவில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளான்.
காத்தான்குடி-01, மீரா ஜும் ஆப் பள்ளி ஒழுங்கையைச் சேர்ந்த 14 வயது டைய ஏ.பி.எம்.இன்ஷாப் என்ற சிறு வனே மேற்படி விபத்தில் உயிரிழந் துள்ளான். கடந்த செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பகுதியில் வைத்து சைக் கிளில் குறித்த சிறுவன் பயணித்துக் கொண்டிருக்கையில் முன்னாடி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனின் கத வினை வேனின் சாரதி அவதானமின்றி திறந்தமையினால் வேனின் கதவில் மோதுண்டு சிறுவன் கீழே வீழ்ந்துள்ளான்.
இதன்போது பின்னாடி வந்த முச்சக்கர வண்டியும் சிறுவன் மீது மோதியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டது.
இருப்பினும் சிறுவன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டான். இந் நிலையிலேயே அச் சிறுவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா்.