Breaking News

சம்பந்தனைச் சந்தித்த மகிந்த, கோத்தா அரசியலில் பரபரப்பு.!

கொழும்பு அரசியலில் இன்று மஹிந்த, சம்பந்தன், கோத்தா, ஆகியோர் ஒரே இடத்தில் சந்தித்தரத பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன இராணுவத்தின் 91 ஆவது சம்மேளனம் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் நடை பெற்றுள்ளது. 

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ மற்றும் சம்பந்தன் ஆகி யோர் நீண்ட நேரக் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்ட தாகவும் அவ்விடத்தில் முன்னாள் பாது காப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோர் கலந்துள்ளனா். 

இதில் அவர்கள் என்ன பேசினார்கள் என்ற செய்திகள் வெளியாகாத போதும் கடந்த சில காலங்களாக எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தை விமர்சித்து வரும் நிலையில் எதிர்கால ஆட்சி மாற்றங்கள் குறித்த கலந்துரையாடல்கள் அங்கு நடைபெற்றிருக்கலாமென எதிா்பாா்க் கப்படுகின்றது. 

இந் நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சம் பந்தன் ஆகியோர் நீண்ட நேரக் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாது காப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் இலங்கைக்கான சீனத் தூது வர் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர். 

மேலும் நிகழ்வில் சீன மற்றும் இலங்கை இராணுவ அதிகாரிகள் என பலர் கல ந்து சிறப்பித்துள்ளனா்.