விஜயகலா விவகாரம்; தென்னிலங்கையில் நடந்தது என்ன?
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க வேண்டும் என்று கூறிய சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சுப் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளாா்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரம சிங்க வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உட னடியாக அமுலுக்குவரும் வகை யில் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியில் இரு ந்து விஜயகலா மகேஸ்வரனை தற் காலிகமாக இடைநிறுத்தி வைத்துள் ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்வுகளை வழங்கும் நோக்கில் சிறில ங்கா ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் நடமாடும் சேவை நேற்றைய யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற் றுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோர் கலந்துகொண்டிருந்த இந் நிகழ்வில் உரையாற்றிய சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.
இந்த அறிவிப்புக்கு எதிராக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஆளும் தேசிய அரசாங்கத்தில் அங் கம் வகிக்கும் தென்னிலங்கை கட்சிகளும் அதேபோல்
மஹிந்த அணியினரும் கடும் ஆத்திரம் வெளியிட்டுவருவதுடன், விஜயகலா மகேஸ்வரன் அரசியல் யாப்பை மீறியுள்ளதால் அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கி கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய (03.07.2018) தினம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து விஜயகலா மகேஸ்வரனை இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையிலேயே விஜயகலா மகேஸ்வரனை இராஜாங்க அமைச்சுப் பத வியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள் ளாா்.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியதன் மூலம் அரசியல் யாப்பையும், நாட்டின் சட்ட திட்டங்களையும் மீறியுள்ளரா என்பது தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய சிறிலங்கா சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளாா்.
இதேவேளை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணியினரும் சிறிலங்கா நாடாளுமன் றில் குழப்பம் விளைவித்ததால் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டன.
இவ் அறிவிப்புக்கு எதிராக தென்னிலங்கையில் கடுமையான எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதி நிதித் துவப்படுத்தும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றைய தினம் ஸ்ரீலங்கா நாடாளு மன்றம் கூட்டப்பட்டிருந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் விஜயகலா மகேஷ்வரன் தேசத் துரோக அறிவித்தலொன்றை வெளியிட்டதுடன்,
பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உரு வாக்க வேண்டும் என்று கூறிய கருத்து அரசாங்கத்தினுடையதா அல்லது ஐக் கிய தேசியக் கட்சியினதா என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செய லாளரான கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் வினவினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்களால் கடும் விரக்தியடைந்த நிலையிலேயே செய்வதறியாது மன வருத்தத்துடன் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு கூறியிருப்பதாக கூறியதுடன், இக் கூற்றை தமது கட்சியும், அரசாங்கமும் கடுமையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை சில நாட்களுக்கு முன்னதாக ஹிட்லர் ஆட்சியொன்று தொடர் பில் கதைத்த போது இவ்வாறான எதிர்ப்புக்கள் எழுப்பப்படாதது குறித்தும் அகிலவிராஜ் விசனம் வெளியிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை யிலான ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சரான விஜேகலா மகேஸ்வரன் அமைச்சர்கள் இருவர் இருந்த மேடையில் தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும் என்று கூறி பயங்கரவாதத்திற்கு துணை போயுள்ளதால் அவருக்கு அமைச்சர் பதவியை வகிக்க முடியாதெனத் தெரிவித்துள்ளாா்.
அதேவேளை விஜயகலா மகேஸ்வரனுக்கு மன வருத்தங்கள் இருந்தால் அதற்கு வேறு ஏதாவது செய்துகொள்ளலாம் என்றும் குறிப்பிட்டதுடன், உடன டியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறும் வீரவன்ச வலி யுறுத்தியுள்ளாா்.
இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களும் ஆதரவாக கருத்து வெளியிட்டதோடு விமல் வீரவன்ச தலைமையில் ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் சபையில் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தொடர்ச்சி யாக கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்,
விஜேகலாவை நீக்கும்வரை இந்த அமர்வுகளை நடத்த விடமாட்டோம் என் றும் கூச்சலிட்டனர்.
இதன்போது தலையிட்ட சபாநாயகர், அச்சுறுத்தி எதனை யும் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டதுடன், சபை நடவடிக் கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாது என்றால் சபை நடவடிக் கையை தற்காலிகாக ஒத்திவைக்க நேரிடுமெனத் தெரிவித்துள்ளாா்.
சபாநாயகரின் இந்த அறிவித்தலையும் பொருட்படுத்தாது மஹிந்த அணியினர் தொடர்ச்சியாக குழப்பம் விளைவித்ததால் சபாநாயகர் கரு ஜயசூரிய அமர்வு களை தற்காலிகமாக ஒத்திவைத்தார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன் றிணைந்த எதிரணி கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜேகலா மகேஷ்வர னின் கூற்றுக்கள் ஐக்கிய தேசியக் கட்சியினுடையது எனக் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூடடமைப்பினர் நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டித் தீர்வை வலியுறுத்திவரும் நிலையில் மறுபுறம் ஐக்கிய தேசியக் கட்சியினர் தனது உறுப்பினரான விஜேகலா மகேஷ்வரனைக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முற்பட்டுள்ளதாக மஹிந்த அணியினர் கடுமையாக சாடியுள்ளனர்.
பந்துல குணவர்தன (நாடாளுமன்ற உறுப்பினர்) கருத்து தெரிவிக்கையில்.,
விஜேகலா நாடாளுமன்ற உறுப்பினர் யாழ் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு அக்கட்சி யின் நாடாளுமன்றத்தைப் பிரதி நிதி த்துவப்படுத்தும் தமிழ் பெண் உறுப்பி னராவார்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரு அமைச்சர்களுக்கு முன்னிலை யில் சுதந்திரமாக மக்களும், மாணவர்களும் வீதிகளில் நடமாடுவதற்கு அவ சியமென்றால் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் வரவேண்டும், அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டுமென கூறியிருக்கின்றார்.
இந்த அறிவிப்பை வெறுமனே பார்க்கக்கூடாது.
ஐக்கிய தேசியக் கட்சி இந்த அறிவிப்பு தொடர்பான முழுமையான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண் டும்.
ஆர்.சம்பந்தன், சுமந்திரன் போன்ற தமிழ்த் தலைவர்கள் அனைவரும் புதிய அரசியல் அமைப்பிற்குள் சமஷ்டி தீர்வை கோரிவரும் நிலையில், மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் வரவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி ஒரே மேடையில் கூறுகின்றது.
இதனால் இந்தப் பிரச்சினை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி, நாட்டைப் பிரிக் காமல், இனங்களுக்கு இடையில் ஐக்கியத்துடன் வாழ்வதற்கு இடமளிப்பதை விட மீண்டும் விடுதலைப் புலிகள் வரவேண்டும் என்பதை தமது உறுப்பி னர்களின் ஊடாக அறிவித்துள்ளது.
எவ்விதமான அசாதாரண நிலைக்கு இந்த நாடு தள்ளப்பட்டுள்ளது என்பது விஜயகலா மகேஷ்வரனின் அறிவிப்பின் ஊடாக புரிந்துகொள்ள முடிகின்றது. விஜேகலா மகேஷ்வரன் இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் இவ்வாறு தெரி வித்துள்ளாா்.
திலக் மாரப்பன, வஜித அபேவர்தன உள்ளிட்டவர்களுக்கு முன்பாக இதனை அவர் தெரிவித்திருக்கின்றார். எனவே ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல இந்த அறிவிப்பானது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடா என்பதையும் அக்கட்சி அறிவிக்கவும் வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.
இவ் விவகாரம் தொடர்பில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி) தெரிவிக்கையில்.,
சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அவருக்கு தொடர்ந்தும் அமைச்சுப் பதவியின் கடமைகளை மேற்கொள்வதற்கான உரிமையில்லை.
அவர் சத்தியப்பிரமாணத்திற்கு எதிராகவே செயற்பட்டுள்ளார். எல்லா தேவை களுக்கும் நீதிமன்றம் செல்வதாயின் அரசாங்கம் எதற்கு உள்ளது? இப் பிரச்சினை எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் அரசாங்கத்தின் பலவீனமான நிலையாகும்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி இப்போது இருந்திருந்தால் அவர் உடனடியாக நடவடிக்கையை எடுத்திருந்திருப்பார். நீதிமன்றத்திற்கு அதனை வழங்க முடியாது. அது விரைவிலும் இடம்பெறாது.
எனவே எமது அரசியலமைப்பிற்குள் உடனடி நடவடிக்கையை எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அரசாங்கத்திற்கு இருக்கிறது என்ற போதிலும், கடன்காரர்களுக்கு அதனை செலுத்துவதற்கான தேவையிருப்பதால் அரசாங் கம் எதனையும் செய்யாமலிருக்கிறது” என அவர் தெரிவித்தார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் மனநிலை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
தனது கணவரான மகேஸ்வரனை கொலை செய்த விடுதலை புலிகளுக்கு ஆதரவாக விஜயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ளதாக சுட்டிக் காட்டியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.
ஷாந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,.
'சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று யாழ்ப்பாணத் தில் இடம்பெற்ற நிகழ்வின் போது இல்லாது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அமைப்பு மீள உருவாக வேண்டுமென வலியுறுத்தியமைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளை ஞர் முன்னணி சார்பில் நாம் எமது எதிர்ப்பினைத் தெரிவித்துக்கொள் கின்றோம்.
நாட்டிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எந்த செயல்களிலும் ஈடுபடமாட்டோம் என உறுதியளித்த பின்னர் அமைச்சராக நாடாளுமன்றத்திற்குள் உள் வரு கின்ற நிலையில், இராஜாங்க அமைச்சர் முன்வைத்துள்ள கருத்தானது அவ் வாறு பாதிப்பினை ஏற்படுத்தும் ஓர் விடயமாகும்.
அறிந்து கொண்டே செய்த விடயம் தொடர்பில் அவரது கட்சியும் கட்சித் தலை வர்களும் இணைந்து நீதியுடனான ஒரு முடிவை எடுப்பது அவசிமானதாகும்.
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கணவர் விடுதலைப் புலி கள் அமைப்பினரால் கொலை செய்யப்பட்டார். அவரது இழப்புடன் அவரது இரு பிள்ளைகளுடன் விஜயகலா மகேஸ்வரன் தனிமைப்படுத்தப்பட்டார்.
இவ்வாறு விடுதலை புலிகளினால் நேரடியாக பாதிக்கப்பட்ட ஒருவர் இவ்வா றான ஒரு விடயத்தைத் தெரவித்துள்ள நிலையில் அவரது மனோநிலை தொடர்பில் கேள்வியெழும்புகின்றது.
2015ஆம் அண்டு இடம்பெற்ற வித்தியா கொலை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளிக்கு அடைக்களம் வழங்கிய காரணத்தினால் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் மீது வடக்கு மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
இந்நிலையில் அவர் மீதுள்ள நம்பிக்கை இழப்புகளை இல்லாமல் செய்வதற்கு, தம் கணவனின் உயிரைப் பறித்த விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதர வளிப்பதாக பிரசாரம் செய்து அடுத்தத் தேர்தலின் போது மக்கள் ஆதரவினைப் பெற்று மீண்டும் நாடாளுமன்றுக்குள் வர திட்டமிடுகின்றார் என அவர் மேலும் தெரிவித்துள்ளாா்.
தெற்குக்கு ஒரு ஹிட்லரோ அல்லது வடக்குக்கு ஒரு பிரபாகரனையோ உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ஐக்கிய தேசிய கட்சி செயற்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொதவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் ஹரின் பெர்ணான்டோ தெரிவிக்கையில்.,
“விடுதலை புலிகளின் இயக்கம் மீண் டும் மேலோங்க வேண்டுமென சிறு வர் பாதுகாப்பு மற்றும் மகளீர் விவ கார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் குறிப்பிட்ட கருத்தினை ஐக்கிய தேசிய கட்சி வன் மையாக கண்டிக்கின்றது.
இராஜாங்க அமைச்சர் விஜகலா மகேஸ்வரன் இக் கருத்தினை எந்த நோக்க த்துக்காக குறிப்பிட்டார் என்பது தொடர்பில் யாரும் அறிந்திருக்க வாய்ப் பில்லை. அவர் அவரது தனிப்பட்ட கருத்தினையே வெளிபடுத்தியுள்ளார்.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல என்பதே உண்மை யான விடயமாகும். எனினும் அவர் முன்வைத்த இந்த பிரச்சாரம் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று உத்தியோகப்பூர்வ விளக்கத்தினை அளிப் பார்.
ஆளுங்கட்சியாக செயற்பட்டு வருகின்ற ஐக்கிய தேசியக் கட்சியானது தூய் மையான ஆட்சியினையே முன்னெடுத்துச் செல்கின்றது. இந்நிலையில், தெற் குக்கு ஒரு ஹிட்லரோ அல்லது வடக்குக்கு ஒரு பிரபாகரனையோ உருவாக்க வேண்டும் என்ற தேவை ஐக்கிய தேசிய கட்சியிடம் இல்லை.
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்டுள்ள இந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடி க்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே கட்சியின் தலைவர் உள்ளார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த தமிழீழ விடு தலைப் புலிகளின் தலைவர் வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மனத்தாக்கத்தில் கூறியிருந்தாலும் அதனை வன் மையாக கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் விஜயகலா உட்பட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோ ருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்று பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவெடுக்க வேண்டும் என்று இரா ஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் வைத்து பொது மேடையில் கூறிய விடயம் தென்னிலங்கை அரசியற் களத்தில் பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி உட்பட பல கடும்போக்குவாத சிங்கள அமைப்புக்களும் இவரது இந்தக் கருத்தை வன்மையாக கண்டித்து வருகின் றன.
இந் நிலையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சமூக நலன்புரி பிரதியமைச்சரான ரஞ்ஜன் ராமநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுடன் ஊடக சந்திப்பினிடையே தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு விசாரித்தார்.
உரையாடலின் பின்னர் ரஞ்சன் ராமநாயக்க கருத்துரைக்கையில்.,
‘விஜயகலா வின் பொறுப்பற்ற கருத்து பரிமாற்றமானது அவர் சுயநினைவின்றி இருந் ததை உணர முடிகிறது. இவ்வாறான விடயத்தை பதற்றத்தில் கூறினாலும் அது பிழையான விடயமாகும்.
30 வருட யுத்தத்தின் போது பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்தி ருந்த நிலையில் தற்போது சுதந்திரமடைந்துள்ளோம்.
இந்த நிலையில் மீண்டும் அவ்வாறானதொரு சூழலை ஏற்படுத்த முயற்சிப்பது தவறாகும்.
எனினும் அவர் இப்படியொரு விடயத்தை தெரிவிப்பது இதுவல்ல முதல் தடவை. இப்படியான கருத்துக்களை சிவாஜிலிங்கம், விக்னேஸ்வரன் போன் றோரும் கூறி வருகின்றனர்.
ஆனால் விஜயகலா போன்றோர் யாழில் ஒன்று சொல்கிறார்கள். கொழும்பில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வேறொன்றை சொல்கிறார்கள். அத்துடன், சிலர் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரை ஐயா என அழைக் கிறாரகள்.
ஆனால் நான் ஆயுதமேந்திய போராளிகளை ஒருபோதும் ஐயா என அழைக்க மாட்டேன். மகாத்மா காந்தி, ஆப்ரகாம் லிங்கன் போன்றோரையே நான் ஐயா என அழைப்பேன்.
இன்று எவரும் இன்னுமொரு யுத்தத்தை எதிர்பார்க்கவில்லை. இந்த நிலை யில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவெடுக்க வேண்டும் என்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்.
அது மட்டுமல்லாமல் இவ்வாறான சிந்தனையிலிருக்கும் வடமாகாண முத லமைச்சர் விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பிவைத்து புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நல்லாட்சி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளாா்.