Breaking News

15 தங்க விரு­துகள் பெற்ற வட­மா­காணம்.!

வட­மா­காண சபையின் அனைத்து நிறு­வ­னங்­களும் தங்கள் வினைத்­தி­ற­னான செயற்­பாட்டின் மூலம் எமது மாகா­ணத்தின் அபி­வி­ருத்­திக்கும், வினைத்­தி­ற­னான நிர்­வா­கத்­திற்கும் பங்­காற்ற வேண்­டு­ம் என வடமாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், 

வினைத்­தி­ற­னான செயற்­பாட்டின் மூலம் செய ­லாற்­றி­ய­மைக்­காக 15 தங்க விரு­து­களை வட­மா­காண சபை பெற்­றுள்­ளது. வட­மா­கா­ணத் தைச் சேர்ந்த 15 நிறு­வ­னங்­க­ளுக்கு இவ் விரு­து கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. 

அர­சாங்கக் கணக்­குகள் குழுவால் இலங்கைத் தீவு முழு­வதும் அடங்­க­லாக ஒன்­பது மாகா­ண­ ச­பை­க­ளி­லுமுள்ள மாகாண அமைச்­சுக்கள், திணைக்­க­ளங் கள் மற்றும் விசேட செல­வின அல­குகள் உள்­ள­டங்­க­லாக 260 நிறு­வ­னங்கள் முதன்மை செய­லாற்­றுகை சுட்­டி­களின் அடிப்­ப­டையில் மதிப்­பீடு செய்­யப்­பட்ட போது 35 நிறு­வ­னங்கள் 93 க்கு மேற்­பட்ட அதி­யுயர் செய­லாற்­றுகை மட்­டத்தை அடைந்­துள்­ளன. 

இதில் வட­மா­காண சபையைச் சேர்ந்த 15 நிறு­வ­னங்கள் உள்­ள­டங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. எமது மாகாண சபைக்கு 2015 ஆம் ஆண்டில் ஏழு தங்க விரு­துகள் கிடைத்­தன. தற்­போது 2016 ஆம் ஆண்­டுக்­கான மதிப்­பீட்டில் 15 தங்க விரு­துகள் கிடைக்­க­வி­ருக்­கின்­றன. 

எனவே, எதிர்­வரும் ஆண்­டு­களில், வட­மா­காண சபையின் அனைத்து நிறு­வ­னங்­களும் தங்கள் வினைத்­தி­ற­னான செயற்­பாட்டின் மூலம் எமது மாகா­ணத் தின் அபி­வி­ருத்­திக்கும், வினைத்­தி­ற­னான நிர்­வா­கத்­திற்கும் பங்­காற்றக வேண் டுமெனத் தெரிவித்துள்ளாா்.