விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பு அல்ல நாடாளுமன்ற உறுப்பினர்!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு அல்ல என மலேசி யாவின் கெமரன் ஐலேண்ட் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழர்க ளுக்காக போராடிய சுதந்திர போராளி களாக புலிகளின் உறுப்பினர்கள் போராடினாா்கள் எனத் தெரிவித்துள் ளதுடன் தமிழீழ விடுதலைப் புலி களை தீவிரவாத அமைப்பு என முத் திரை குத்துபவர்களுக்கு ஆணித்தர மாக இதனைத் தெரிவிக்க விரும்பு வதாக சிவராஜா தெரிவித்துள்ளார்.
மலேசிய மக்களவையில் இன்று (30.07.2018) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தாா் என freemalaysiatoday.com இல் வெளியாகியுள்ளது.
மேலும் தெரிவிக்கையில்.,
அவர்கள், தமது உரிமைகளுக்காக போராடும் ஏனைய சுதந்திரப் போராளி களைப் போன்றோர்கள் கெமரன் ஐலேண்ட் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி னர் புகழாராம் சூடியுள்ளாா்.
மலேசியாவின் பினாங் மாநில முதலமைச்சரான பேராசிரியர் பி. ராமசாமி புலிகளுக்கு ஆதரவானவர் எனத் தெரிவித்து அவரைக் கைது செய்யுமாறு அங் குள்ள சில முஸ்லிகள் வலியுறுத்தி கடந்த 20ஆம் திகதி போராட்டம் நடத்தி யுள்ளனர்.
இந் நிலையில், மலேசியாவின் பினாங் மாநில துணை முதலைமைச்சரான பேராசிரியர் பி. ராமசாமிக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இல் லையென அதன் முன்னாள் உறுப்பினரும், சமாதான பேச்சாளருமான விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
விசுவநாதன் ருத்ரகுமாரன் தற்போது நிய்யோர்க்கில் சட்ட பயிற்சிபெற்று வரு கின்ற நிலையில் அவர் கடந்த 28-ஆம் திகதி ராமசாமிக்கு அனுப்பியுள்ள மின் னஞ்சலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊடக மொன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் மோதல் நடைபெற்ற காலப்பகுதியில் சமாதான நடவடிக்கை களை முன்னெடுப்பதற்காக அமைக்கப்பட்ட அரசியலமைப்பு விவகார குழு வின் உறுப்பினராக ராமசாமி இருந்தார் என குறித்த மின்னஞ்சலில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கம், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அர சாங்கத்திற்கும் இடையில் சமாதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட் டதை அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
இந்த நிலையில், குறித்த குழுவின் இணைப்பாளராக தாம் செயற்பட்டதாக தெரிவித்துள்ள ருத்ரகுமாரன், இலங்கையின் சட்டதரணி ஒருவரும், பேராசி ரியர் ராமசாமியும் குறித்த குழுவில் உறுப்பினராகச் செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த சட்டத்தரணியும், ராமசாமியும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்கவில்லையென ருத்ரகுமாரன் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் பிரசுரமாகியுள்ளது.