சலுகைகள் மூலம் ஏமாற்றி விட முடியாது - சி.வி.
வடக்கு, கிழக்கு மக்கள் பொருளாதார அபிவிருத்தியையே கேட்கின்றார்கள் என்று அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்க ஆவல் கொண்டிருக்கும் ஒருவர் பேசியுள்ளார்.
தமிழ் மக்கள் போரினால் வலுவிழந் துள்ளார்கள். படித்தவர்கள், பல் தொழில் விற்பன்னர்கள் எனப் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்
கள். வலுவிழந்தவர்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசினால் அவர்கள் அவற்றைக் கவ்விக் கொண்டு தமது உரித்து பற்றி, சுதந்திரம் பற்றி, தனித்துவம் பற்றி பேசமாட்டார்கள் என அவர் எண்ணுகின்றார் போன்று கருதுகின்றேன் என வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
எமது வடமாகாண சபை ஒக்டோபரில் கலைக்கப்பட்டதும் வடமாகாண ஆளு நர் அடுத்த தேர்தல் வரமுன் அவர் எதனைச் செய்ய வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அறிகின்றேன்.
கிளிநொச்சியில் பௌத்த விகாரையொன்றைத் திறந்து வைப்பது அதில் முக்கியமாக உள்ளது. கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளாா்.
இலங்கை சட்ட கல்லூரி சட்ட மாணவர்களின் இந்து மகா சபையின் ஏற்பாட் டில் வெள்ளவத்தை தமிழ் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கலை விழா மற்றும் நக்கீரம் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள் ளாா்.
வடக்கு முதல்வர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிற்க ஆவல் கொண்டிருக்கும் ஒருவர் பேசியதைப் பத்திரிகையில் பார்த்தேன். வடகிழக்கு மக்கள் பொருளாதார அபிவிருத்தியையே கேட்கின்றார்கள் என்றிருந்தார்.
அவரின் எண்ணம் தமிழ் மக்கள் போரின் பின்னர் வலு இழந்துள்ளார்கள். படித்தவர்கள், பல்தொழில் விற்பன்னர்கள் எனப் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். வலு இழந்தவர்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசினால் அவர் கள் அவற்றைக் கவ்விக் கொண்டு தமது உரித்து பற்றி சுதந்திரம் பற்றி, தனித்துவம் பற்றி பேசமாட்டார்கள் என்பதாகும்.
இத் தொடர் குழப்பநிலையை எமக்கிடையே ஏற்படுத்துவதிலும் சிங்கள அரசியல்த் தலைவர்கள் வெற்றி கண்டுள்ளார்கள். தனிப்பட்ட சலுகைகளை அரசியல்வாதிகளுக்கு நல்கி அவர்களைத் தம்பால் ஈர்க்க எத்தனித்து இதுவரையில் வெற்றியும் கண்டுள்ளார்கள் என்றே கூற வேண்டியுள்ளது.
இதனால் தான் தமிழ்ப் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் தமது பகைமையுணர்வுகளை மூட்டை கட்டிவிட்டு ஒருங்கிணைந்து ஒற்றுமையாக ஒரு பொதுவான அரசியல் தீர்வைக் கோர வேண்டுமெனக் கருத்து வெளியிட்டு வருகின்றோம்.
அப் பொதுவான கோரிக்கை தான் சமஷ்டி அரசாங்கம் என்பது. சமஷ்டி என்றவுடன் அது பிரிவினை என்று சிங்கள மக்கள் மனதில் பயத்தையும் பீதியையும் நிலை நாட்டியுள்ளார்கள் சிங்கள அரசியல் தலைவர்கள். சமஷ்டி பற்றிய புரிந்துணர்வு சிங்களப் பொது மக்களைச் சென்றடையாமையே சமஷ்டியை தொடர் ந்து வரும் பெரும்பான்மை அரசாங்கங்கள் எதிர்ப்பதன் காரணம்.
தாம் சமஷ்டி பற்றிய உண்மையை மக்களுக்கு உணர்த்தினால் தம்மைத் துரோகிகள் என்று அவர்கள் முடிவு செய்துவிடுவார்களோ என்று கவலைப்படுகின்றார்கள் சிங்கள அரசியல் தலைவர்கள். சமஷ்டி பற்றிய பொய் கூறிய சிங்கள அரசியல் தலைவர்கள் அது பற்றிய உண்மையைக் கூறத் தயங்குகின்றார்கள். அதற்காகத் தான் ஒன்பது மாகாணங்களுக்கும் சமஷ்டி கேளுங்கள் என்று சிங்களத் தலைவர்களிடம் கோரி வருகின்றேன்.
சில காலத்திற்கு முன்னர் நடந்த ஒன்பது மாகாண முதலமைச்சர்கள் மாநாட்டில் வடமத்திய மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சர் பின்வருமாறு ஜனாதிபதி சிறிசேனா முன் எடுத்துரைத்தார். “எமக்கு நூறுவீதம் அதிகா ரப் பகிர்வு வேண்டும். ஆனால் சமஷ்டி வேண்டாம்” என்று அவர் கூறினார்.
முழுமையான அதிகாரப் பகிர்வை ஒரு சமஷ்டி அரசியல் யாப்பின் கீழ்த் தான் நடைமுறைப்படுத்தலாம் என்பது அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். சமஷ்டி என்ற சொல் தான் அவருக்கு வேண்டாதிருந்தது.
சமஷ்டியின் உள்ளடக்கமும் உள்நோக்கமும் அவருக்கு எந்தவித இடர்பாட்டினையும் கொடுக்கவில்லை. சமஷ்டி பற்றி தமிழர்களிடையே இரு விதமான எதிர்ப்பாளர்கள் இருக்கின்றார்கள். ஒரு சாரார் சமஷ்டி கிடைக்காது; ஆகவே வேறேதேனும் பொறிமுறையை நாங்கள் மாற்றாக உருவாக்க முனைவோம் என்கின்றார்கள்.
இன்னொரு சாரார் ஒற்றையாட்சி முறையே சிறந்தது என்கின்றார்கள். இரண் டாம் பிரிவினுள் பணம் படைத்த தமிழ் வர்த்தகர்கள் பலர் இடம் பெறுகின்றார்கள். சமூகத்தின் உயர் மட்டச் சிங்களத், தமிழ், முஸ்லிம் தலைவர்களு டன் தாம் மிக நெருக்கமாகப் பழகி வருவதால் அவர்களைக் கொண்டு நாடு பூராகவும் எதனையம் தாம் செய்விக்கலாம் என்ற ஒரு இறுமாப்பு அவர்களிடையே காணப்படுவதை நான் அவதானித்துள்ளேன்.
முக்கியமாகச் சில முறையற்ற செயற்றிட்டங்களை இவ்வாறானவர்கள் மாகாணங்களுக்குக் கொண்டு வரும் போது மாகாண அரசாங்கம் தம் மக்கள் நலம் சார்ந்து எதிர்ப்புத் தெரிவித்தால் “பார்த்தீர்களா?
இப் பல்லில்லாத 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழேயே இவ்வளவு பந்தா காட்டுகின்றார்கள் என்றால் உண்மையான சமஷ்டி கிடைத்தால் என்னவெல் லாம் இவர்கள் சொல்வார்கள்?”
என்று கூறி ஒற்றையாட்சி முறையே சிறந்தது என்கின்றார்கள். அதிகமாக இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கொழும்பில் வாழும் பணம் படைத்த தமிழ் வர்த்தகர்களேயாவர். சமஷ்டி கிடைக்காது என்பதால் சமஷ்டியை வெறுப்பது எமது கையாலாகாத தனத்தைக் காட்டுகின்றது.
சமஷ்டி என்ற சொல் சிங்கள மக்களிடையே வெறுப்பு ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையேயாகும். ஆனால் அந்த வெறுப்பு சமஷ்டிக்கு எதிரானதல்ல. சமஷ்டியை ஆதரித்தவர்களுக்கு எதிரானது. தமிழர்களை வெறுத்தவர்கள் அவர்கள். தமிழர்கள் சமஷ்டி கேட்டதால் சமஷ்டியையும் வெறுத்தார்கள். சமஷ்டி என்பது ஒரு நாகரிக நவிலல் அல்ல.
அது அத்தியாவசியமானது என்பதை இங்கு கூற விரும்புகின்றேன். வடக்கு கிழக்கு மாகாண பெரும்பான்மை மக்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களிடமிருந்து மொழியால், கலாசாரத்தால், மதத்தால், வாழ்க்கை முறையால் வேறுபட்டவர்கள். அவர்கள் சர்வதேச சட்டத்தின் ஏற்பாடுகளின்படி ஒரு மனிதக்குழுமம் ஆவார்கள்.
அவர்களுக்கென்று ஒரு நீண்டசரித்திரம் உண்டு. வேடர்களுட் பட இவ்விரு மாகாண மக்களுமே இலங்கையின் பூர்வீகக் குடிகள். சிங்கள மொழி கி.பி.6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டில் வழக்குக்கு வரமுன் சிங்களம் பேசியோர் இருக்கவில்லை.
ஆகவே வெள்ளையர்கள் நாட்டை 1833ஆம் ஆண்டில் நிர்வாக ரீதியாக ஒன்றிணைக்கும் போது இருதரப்பட்ட மக்களை அல்லது கண்டிய சிங்களவரையும் தனியாகச் சேர்த்தால் மூன்று விதமான மக்கள் குழுமங்களை இணைத்தார்கள்.
இன்று பெரும்பான்மையோர் அரசாங்கங்கள் கண்டிய சிங்களவர்களுக்கும் சம அந்தஸ்து அளித்து சிங்கள மக்களை ஒன்றிணைத்துள்ளார்கள். அடுத்து வடகிழக்கைத் தம் வசமாக்க பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன. இந்த நிலையில் எமது ஒரேயொரு மார்க்கம் என்ன?
சமஷ்டியைக் கோரிப் பெறுவது தான் மார்க்கம். சமஷ்டி எம்மை நாமே ஆள வழிவகுக்கும். மத்தியின் உள்ளீடல்கள் குறையும். எமது தனித்துவம் ஓரள விற்குப் பாதுகாக்கப்படும். இதனால் தான் சமஷ்டி வேண்டப்படுகின்றது.
ஒற்றையாட்சி முறை எம்மை சிங்கள ஆதிக்கத்தினுள் ஆழ்த்தி விடும். ஆதிக் கத்தினுள் அமிழ்ந்தாலும் பரவாயில்லை, ஆனால் மொழி, மதம், கலாசாரம் போன்ற பலவற்றாலும் எம்மைத் தம்மோடு இணையச் செய்துவிடுவார்கள்.
வெறும் பொருளாதார நன்மைகளைப் பெற்று எமது தனித்துவத்தை நாம் இழக்க வேண்டுமா என்பதை நீங்களே நிர்ணயிக்க வேண்டும். அன்றைய சிங் கள மக்கள் தலைவர்களின் குறிக்கோள்களையே இன்றைய சிங்கள மக்கள் தலைவர்களும் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
ஆனால் நாம் விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளோம். விட்டுக் கொடுத்தால் நாம் பௌத்த சிங்களவராகவோ பௌத்த தமிழர்களாகவோ மாறிவிட வாய்ப்பி ருக்கின்றது. ஏற்கனவே எமது வடமாகாண சபை ஒக்டோபரில் கலைக்கப் பட்டதும் வடமாகாண ஆளுநர் அடுத்த தேர்தல் வரமுன் அவர் எதனைச் செய்ய வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
என்று அறிகின்றேன். அவர்கள் செய்யவிருப்பதில் ஒன்று கிளிநொச்சியில் பௌத்த விகாரையொன்றைத் திறந்து வைப்பதாகும். கிளிநொச்சியை பௌத் தர்கள் வாழும் இடமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
பௌத்தர்கள் என்றால் சிங்களவரே என்ற தப்பபிப்பிராயம் பரப்பப்பட்டு வரு கின்றது. ஆகவே இன்றைய நிலையில் நாம் உலக நாடுகளுக்கு உண்மையை உணர்த்த வேண்டும். சிங்கள மக்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும்.
சமஷ்டி ஒன்றே எம்மை ஒருமித்து இந்த நாட்டில் வாழ வைக்கும் என்ற உண்மையை சிங்கள மக்களுக்கு உணர்த்த வேண்டும். சமஷ்டி கிடைத்தால் அடுத்த நாளே வடக்கும் கிழக்கும் ஒருங்கிணைந்து இதர மாகாணங்களுடன் சேர்ந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையைப் பரப்ப வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.