பிரதமரின் வருகையை மறுக்கின்றது ஏறாவூர் நகரசபை.!
நாளை பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள மட் டக்களப்பு- ஏறாவூர் பிரதேச செயலகக் கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் ஏறா வூர் நகர சபையின் முதல்வர் உட்பட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாது மறுப்பதாக நகர முதல்வர் ஐ.அப்துல்வாசித் தெரிவித்துள்ளாா்.
பிரதமரின் வருகையினை முன்னி ட்டு மேற்கொள்ளப்படும் எவ்வித பணிகளிலும் நகர சபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை செயற் பட விடுவதில்லையென தீா்மானம் எடுத்துள்ளதாகவும் நகரசபை மண்ட பத்தில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகை தரவுள்ள நிகழ்விற்கான அழைப்பிதழில் ஏறாவூர் நகர சபை முதல்வரின் பெயர் உள்வாங்கப்படாமைக்காக கண்டனம் தெரிவித்துள்ளனா்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிருவாகத்தின் கீழ் இயங்கும் பிரதேசத்திற்கு அக் கட்சியின் தலைவர் வருகை தரவுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றபோதிலும் அதேகட்சியின் உள்ளுராட்சிமன்றத் தலைவரது பெயர் அழைப்பிதழில் திட்ட மிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமெனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் இங்குள்ள அரசியல்வாதியொ ருவரது கையாளாக செயற்படுவதனால் நகர சபை தவிசாளர் மற்றும் உறுப் பினர்கள் பல இடங்களில் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. .