விக்கி மீது குற்றச்சாட்டு - சுமந்திரன்
வடக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைச்சரவை தொடர்பான பிரச்சனைக்கு நீதிமன்றம் வழ ங்கிய தீர்ப்பை அப்படியே அமுல்படுத்தினால் தீர்வுகாண முடியும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுமென்றே விளங்கவில்லை என்பது போல பாசாங்கு செய்வது தான் குழப்ப நிலைக்கு காரண மென குற்றம் சுமத்தியுள்ளாா்.
மேலும் மாகாண சபையில் பேசப்படும் விடயங்கள் தொடர்பாக எவரும் விமர்சிக்கவோ அல்லது விசாரணை செய்யவோ அதிகாரம் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.
யாழ்.சாவகச்சேரியில் நேற்றைய தினம் காலை இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
கேள்வி: யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அண்மையில் சட்ட ஒழுங்கு அமைச்சர், பொலிஸ்மா அதிபர் ஆகியோர் வந்து சென்ற பிறகும் அந்த நிலைமை நீடிக்கின்றதே ?
பதில்: இச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த மாகாண சபைக்கு சட்ட ஒழுங்கானது முறையாக பகிரப்பட வேண்டும். அத்தோடு இப் பிரதேசத்திலுள்ள பொலி ஸார் இப் பிரதேசத்திற்குரிய மொழியினை சொந்த மொழியாகக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் இச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினமானதாகும்.
அந்த நிலைமை ஏற்படும் வரையில் நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. சட்ட ஒழுங்கு அதிகாரத்தை கைகளில் வைத்திருக்கின்ற மத்திய அரசானது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக நாம் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றோம்.
அதனாலேயே சட்ட ஒழுங்கு அமைச்சர் யாழ்ப்பாணம் வந்தார் .
இவ் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நாம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் பிரதமருடனும் பேசவுள்ளோம்.
கேள்வி: வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பாக நீதிமன்றம் கட்டளையொன்றை வழங்கிய பின்னரும் தொடர்ந்தும் பிரச்சினை காணப்படுகின்றதே ?
பதில்: நீதிமன்றம் வழங்கிய கட்டளையில் எப் பிரச்சினையும் இல்லை. அக் கட்டளையை அப்படியே அமுல்படுத்தினால் சுமூகமான மாகாண சபை ஆட்சியை நடத்த முடியும். ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சர் அதனை வேண்டுமென்றே விளக்கமில்லை என்பது போல பாசாங்கு செய்து அதனை அமுல்படுத்தாமையாலேயே தற்போது குழப்ப நிலை நீடிக்கின்றது.
கேள்வி: வடக்கு மாகாண பெண் அமைச்சர் ஒருவர் கைத் துப்பாக்கி வைத்திருப்பதாக உறுப்பினர் அஸ்மின் கூறிய நிலையில் அது தொடர்பாக அப்பெண் அமைச்சர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளாரே ?
பதில்: மாகாண சபையில் பேச்சு சுதந்திரம் இருப்பதாக சட்டத்தில் கூற ப் படுகின்றது. இந்நிலையில் மாகாண சபையில் பேசப்படுகின்ற விடயங் கள் தொடர்பாக எவருக்கும் விமர்சிக்கவோ அல்லது விசாரிக்கவோ அதி காரம் கிடையாதெனத் தெரிவித்துள்ளாா்.