அதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் கையளிப்பு.!
மலையக அபிவிருத்தியை மையமாக வைத்து புதிதாக அதிகார சபையொ ன்றை உருவாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட பெருந்தோட்ட புதிய கிராமங் கள் அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினா, பொது மனு சமர்ப்பித்தல் போன்ற நிகழ்ச்சி நிரல்கள் முடிவடைந்த பின்னர் அமைச்சர் பி.திகாம்பரம் குறித்த சட்டமூலத்தை சமர்ப்பித் துள்ளாா்.
தேசிய அபிவிருத்திச் செயல்முறையில் பெருந் தோட்ட சமுதாயத்தவர்களின் பங்களிப்பினை பெற்றுக் கொள்வதற்காகவும் பெருந்தோட்ட பிராந்தியத்தில் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளின் மூலமாக பெருந்தோட்ட சமுதாயத்தினரை சமூக நீரோட்டத்தினுள் சேர்ப்பதனை உறுதிப்படுத்தும் நோக்குடன் மலையக அபிவிருத்திக்கான புதிய அதிகார சபை உருவாக்கப்படவுள்ளது.
மலையக அபிவிருத்தியை மையமாக கொண்ட வெளிநாட்டு மானிய கொடை களை பெற்றுக்கொள்வதுடன் வெளிநாட்டு மானிய கொடை, நன்கொடைகளை பெறும்போது வெளிநாட்டு மூலவளத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டு மெனச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அதிகார சபையினால் தீர்மானிக்க கூடியவராக ஏதேனும் அரச வங்கியில் அல்லது அரச நிதி நிறுவனத்தில் நடப்பு, சேமிப்பு அல்லது வைப்பு கணக்குகளைத் திறந்து பேண முடியும்.
மேலும் அதிகார சபையின் நோக்கங்களுக்காக உடனடியாகத் தேவைப்படாத எவையேனும் நிதிகளை அரச வங்கிகளிலும் அரச நிதி நிறுவனங்களிலும் முதலீடுகளைச் செய்யலாம்.
அதிகார சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட ஏதேனும் அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனத்தை குத்தகைக்கு கொடுக்கலாம், ஈடுவைக்கலாம், அடைமானம் வைக்கலாம், விற்கலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகார சபையானது அரசாங்கத்தின் திட்டங்களையும் நிகழ்ச்சி திட்டங்களையும் கருத்திட்டங்களையும் அமுலாக்குதல், தோட்டங்களிலுள்ள வீடுக ளின் சட்டப்படியான இருப்பாட்சியாளர்களுக்கு அத்தகைய வீடுகளின் சொத்தாண்மையை வழங்குவதற்காக அவர்களுக்கு உரித்துறுதிகள் வழங்குவதை வசதிப்படுத்தல், தோட்ட இளைஞர்களின் கல்வி அபிவிருத்திக்காக மூன்றாம் நிலை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பிரவேசிப்பதற்கு உதவி வழங்கு தல்,
தேசிய கட்டட ஆராய்ச்சி மற்றும் அனர்த்த பேரழிவு செயலாட்சி நிலையத்தின் கலந்தாலோசனையுடன் அபாயகரமான இடங்களை அடையாளம் காணுதல், அவற்றை மாற்று பாவனைக்காக மாற்றுதல் போன்ற பணிகளை கொண்டிருக்கும்.
அத்துடன் அதிகார சபையின் உறுப்பினராக விருப்பதற்கான தகைமையீனம், நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான ஏற்பாடுகள், அதிகார சபையின் இலச்சினை, சபையின் கூட்டங்களுக்கு வருகை தருவதற்கான ஊதியம், பணிப்பாளர், தலைமையதிபதி அதிகாரங்களும் பணிகளும், அதிகார சபைக் கான புதிய நிதியம் உருவாக்கல், அதிகார சபையின் செயற்பாடுகளில் அமைச் சரின் வகிபாகம் போன்ற பல்வேறு விடயங்கள் சட்டமூலத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.