"சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி தலை சாய்க்க மாட்டாா்" - மஹிந்த சமரசிங்க.!
அமைச்சரவையின் பூரண மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானித்ததுடன் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி ஒருபோதும் தலை சாய்க்க மாட்டாா் என துறை முகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள் ளாா்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
தொடர்ந்தும் கூறுகையில்,
நாட்டுக்குள் போதைப்பொருட்கள் அதிகரித்துள்ளதாகவும் சிறைச்சாலைகளுக்குள் இருந்தே போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகள் வழிநடத்தப்படுவதாக புலனாய்வு தகவல் கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி அமைச்சரவையில் தெரிவித்துள்ளாா்.
இதனைக் கட்டுப்படுத்துவதாக இருந்தால், சிறைச்சாலைகளில் இருந்து வழிநடத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதற்காக போதைப்பொருள் நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை தீர்ப்பாக்கப்பட்ட பின்னரும் சிறைச்சாலைக்குள் இருந்துகொண்டு இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டுமென ஜனாதிபதி அமைச்சரவையில் வெளிப்படுத்தியுள்ளாா்.
ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அன்று அமைச்சரவையில் இருந்த யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். தற்போது யாரும் மரண தண்டனை தொடர்பாக விமர்சிப்பதாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
அத்துடன் இது தொடர்பாக வேறுபட்ட கருத்துடையவர்கள் இருக்கலாம். என்றாலும் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டால் அதனை பாதுகாத்துக்கொள்வது அமைச்சரவையில் இருக்கும் அனைவரதும் கூட்டுப்பொறுப்பாகும்.
மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானத்தை விரைவாக நிறைவேற்றுமாறு எழுத்துமூலம் சிலர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
அதேபோன்று இதனை நிறைவேற்றக்கூடாது என சிலர் தெரிவித்துள்ளனர். என்றாலும் அதிகமானவர்களின் நிலைப்பாடாக இருப்பது மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதாகும். அத்துடன் மரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்துக்கு ஜனாதிபதிக்கு சர்வதேச ரீதியில் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக சிலர் விமா்சித்துள்ளனா்.
இதற்கு ஜனாதிபதி அண்மையில் பதில் அளித்திருந்தார். அதனால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி சர்வதேச அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டார். ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு வில் இது தொடர்பாக கேள்வி எழுப்பினால் எமது நாட்டின் நிலைமையை தெளிவுபடுத்த முடியும்.
சர்வதேச ரீதியில் 54 நாடுகளில் தண்டனை சட்டம் நிறைவேற்றப்படுகின்றது. 29நாடுகளில் சட்டம் அமுலில் இருந்தாலும் எமது நாடுபோன்று தண்ட னையை நிறைவேற்றுவதில்லை.105 நாடுகளில் தண்டனைச்சட்டம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.எமது நாட்டுக்கு அண்மை நாடான இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றது.
நாட்டினதும் நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதியுமே ஜனாதிபதி மரண தண்டனையை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.