Breaking News

மஹிந்தவுக்கு எதிராக பிரேரணை ஒத்திவைப்பு.!

தேர்தல் பிரச்சாரத்திற்காக சீனாவிடமிருந்து நிதியை பெற்ற விவகாரம் தொட ர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக நாடாளு மன்ற ஒத்திவைப்பு பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு ஐக்கியதேசிய கட்சி தீர்மானித்துள்ளது. 

எதிர்வரும் வியாழக்கிழமை இவ்வா றான பிரேணையை கொண்டு வருவ தற்கு கட்சி தீர்மானித்துள்ளது. இதே வேளை முன்னாள் பாதுகாப்பு செய லாளர் கோத்தபாய ராஜபக்ச குறித்த பிரேரணையை கொண்டுவருவது குறித்தும் ஐக்கியதேசிய கட்சி ஆராய் ந்து வருகின்றது. இது குறித்து ஐதேக வின் நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.