வடக்கு, கிழக்கில் அரசாங்கம் மக்களுக்காகச் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு.!
பின்னடைவைச் சந்தித்துள்ள மக்கள் வாழ்வை மீளக்கட்டியெழுப்பி, ஏனைய மாகாணங்களைப் போன்று வடக்கு, கிழக்கிற்கும் அபிவிருத்தியை பெற்று வழங்குவதில் அரசாங்கம் தனது பாா்வையைத் திருப்பியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபி விருத்திப் பணிகளைத் துரிதப்படுத்து வதற்காக ஜனாதிபதி நியமித்துள்ள விசேட ஜனாதிபதி செயலணி, ஜனா திபதி தலைமையில் நேற்று (30) பிற் பகல் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இச் சந்திப்பில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முறையாகவும் வினை த் திறனாகவும் முன்னெடுத்து மக்களுக்கு துரித நன்மைகளை பெற்றுக் கொடு க்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதி வௌியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறி வித்தலினூடாக ஜனாதிபதியினால் இச் செயலணி நியமிக்கப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறித்த செயலணியின் தலைவராக செயற்படுகின் றாா்.