Breaking News

கொழும்பில் 11 பேர் கடத்தல் - சந்தேக நபரிற்கு உதவிய கடற்படை அதிகாரி

முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படை பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன கொழும்பில் 11 பேர் காணாமல்போன சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை அதிகாரி பிரசாந் ஹெட்டியாராச்சி தப்புவதற்கு உதவினார் என இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதி மன் றத்தில் தெரிவித்துள்ளனர்.

பிரசாத்ஹெட்டியாராச்சி என்ற சந்தேக நபரை கண்டு பிடிப்பதற்காக பொது மக்க ளின் உதவியை நாடியுள்ளோம் என தெரிவித்துள்ள குற்றப்புலனாய்வு பிரி வினர் ஊடகங்களின் உதவியை நாடி யுள்ளோமெனத் தெரிவித்துள்ளனா்.

அவரது மனைவி அளித்த வாக்கு மூலத் தின் அடிப்படையில் நீதிமன்றம் ஆஜ ரா குமாறு உத்தரவிட்ட தினத்தில் அவர் கடற்படை தலைமையகத்தில் காணப் பட்டது உறுதியாகியுள்ளது என குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஹெட்டியாராச்சியின் அறைக்கு அருகில் உள்ள அறையில் தங்கியிருந்த ஜி லக்சிறி என்பவரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டுள்ளோம் என சிஐடி யினர் தெரிவித்துள்ளனர். ரவீந்திர விஜயகுணவர்த்தன ஓரு நாள் அங்கு வந்து ஹெட்டியராச்சியை ஏசியதுடன் ஹெட்டியாராச்சி எங்கு செல்ல விரும்புகின் றார் என கேட்டார் என லக்சிறி தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டால் தன்னால் ஹெட்டியாராச்சியை காப் பாற்ற முடியாமல் போய்விடும் என ரவீந்திர விஜயகுணவர்த்தன தெரிவித் தார் என லக்சிறி குறிப்பிட்டுள்ளார். 

 பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு முன்னாள் கடற்படை தளபதி வழங்கியதாக நபர் ஒருவர் பார்சல் ஒன்றை வழங்கினார் அந்த பார்சலில் பணம் இருந்ததை பார்த் தேன் அந்த பார்சல் கிடைத்து 24 மணிநேரத்தில் அவர் மாயமாகிவிட்டார் என வும் லக்சிறி தெரிவித்ததா என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.