Breaking News

வரலாற்று முக்கியத்துவ தூபியை திரை நீக்கம் செய்தாா் ஜனாதிபதி.!

கீர்த்திமிக்க வரலாற்று பாரம்பரியங்களைக் கொண்ட எமது கடந்தகால கலா சார மரபுரிமைகளை பாதுகாத்து அவற்றை எதிர்கால தலைமுறைக்கு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

பொலன்னறுவை ஹிங்குரக்கொட உனகலா வெஹர ரஜமகா விகாரை யின் வரலாற்று முக்கியத்துவ மிக்க தூபியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித் துள்ளாா். 

தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களையும் அனைத்து சமயங்களுக்கு மான சமய ஸ்தாபனங்களையும் பாதுகாக்கவும் அவற்றின் அடிப்படை தேவை களை நிறைவேற்றும் வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள் ளவும் ஜனாதிபதியின் எண்ணக் கருவின்படி நடைமுறைப்படுத்தப்படும் 'எழு ச்சி பெறும் பொலனறுவை" மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உனகலா வெஹர புனர் நிர்மாண நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.