வடமாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடத் தயார் என்கிறாா் - மாவை.!
வடமாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவ தற்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரு மான மாவை சேனாதிராஜா விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அங் கத்துவக் கட்சிகளின் கூட்டம் கொழு ம்பில் நேற்று வியாழக்கிழமை நடை பெற்றது.
இதன்போது பல்வேறு விட யங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டி ருந்த நிலையில் மாகாண சபைத் தேர் தல்கள் குறித்து கருத்து வெளியிடு கையிலேயே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதை பரிசீலிக்கத் தயார் எனவும் கடந்த மாகாண சபைத் தேர்தலில் தான் இழைத்த தவறை அடுத்த மாகாண சபைத் தேர்தலில் இழைக்கத் தயாரில்லை எனவும் பங்காளிக் கட்சித்தலை வர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தின்போது கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுகள் தொடர் பிலும் ஆராயப்பட்டுள்ளது.
இதில் கட்சிகளுக்கிடையிலான ஆசனப் பங்கீடுக ளில் இறுதி நேரத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளும் தேர்தல் பின்னடைவுக்கான காரணங்களில் ஒன்றாக எடுத்துக் கூறப்பட்டிருந்தது.
எனவே அடுத்துவரும் தேர்தல்களில் வேட்பாளர்கள் மற்றும் ஆசனங்கள் என் பன தொடர்பில் முன்னதாகவே முடிவுகளை எடுக்க வேண்டுமெனத் தெரிவித் துள்ளாா்.
குறிப்பாக மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளராக தன்னை போட்டியிடக் கோரினால் அதனைப் பரிசீலிக்கலாமென ஊடகங்களுக்கு தெரி வித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு கோரப்படும்போது அது தொடர்பில் முடிவெடுப்பதுடன் அந்த முடி வானது கடந்த காலங்களில் இழைத்த தவறைப் போன்றதாக இருக்காது என வும் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ள போதிலும் இது தொடர்பாக எந்த வித இறுதி முடிவுகளும் எடுக்கப்படவில்லையெனத் தெரி வித்துள்ளாா்.