வரியை அறவிடாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை.!
புதிய வரிக்கொள்கையில் தெரிவிக் கப்பட்டுள்ள விடயங்களை தவறாக புரிந்து கொண்டதன் காரணமாக தொலைக்காட்சி நாடக தயாரிப்புக்க ளின் விற்பனையின் போது 14 சதவீத நிறுத்தி வைத்தல் வரியை அறவிடு வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளமையினால் ஏற்பட்டுள்ள நிலை மையினை சரிசெய்து அந்த வரியை அறவிடாதிருப்பதற்கு உரிய நிறுவனத் திற்கு எழுத்து மூலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நிதி அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, புதிய வரிக்கொள்கை காரணமாக தேசிய சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடகக்கலை உள்ளிட்ட ஏனைய கலைத்துறைகளின் எதிர் கால நடவடிக்கைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாயின் உரிய நிறுவ னத்துடன், கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்களுக்கு நியாயமான தீர்வு களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித் துள்ளாா்.
சினிமா, நாடகம் உள்ளிட்ட கலைத்துறைகளை சார்ந்த சங்கங்களின் பிரதி நிதி கள் உள்ளிட்ட கலைஞர்கள் குழுவினருடன் ஜனாதிபதி செயலகத்தில் நடை பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கை காரணமாக கலைத்துறை சார்ந்த தயாரி ப்புக்களை மேற்கொள்வதில் தாம் எதிர்நோக்க நேர்ந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இவர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி எதிர்காலத்தில் நிதி அமைச்சருடன், கலந்துரையாடி அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இப்பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளாா்
உள்நாட்டு சினிமாத்துறை, நாடகக்கலை உள்ளிட்ட ஏனைய கலைத்துறை களை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண் டியது அரசாங்கத்தின் கடமையாகும் என்பதுடன், அவற்றை சரிவர நிறை வேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் பின் நிற்கப் போவ தில்லையெனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளாா்.
தேசிய சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடகக் கலையினை பாதுகாப்பத ற்காக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தேசிய சினிமா மற்றும் நாடகக் கலையின் முன்னேற்றத்திற்காக மேற்கொள் ளப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகளைக் கண்டறிவதற்கு அத்துறைக ளைச் சேர்ந்துள்ள சகல பிரிவினரையும் உள்ளடக்கும் வகையில் குழுவொன் றினை நியமிக்க ஜனாதிபதி ஆலோசனைகளுக்கேற்ப கடந்த சில மாதங்களு க்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன்,
இச்செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து இதன்போது விசாரித்து அறிந்த ஜனாதிபதி அதன் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான தேவையை வலி யுறுத்தியுள்ளாா்.
அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன, உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி உள்ளிட்ட அதிகாரிகளும் சோமரத்ன திசாநாயக்க, தர்மசிறி பண்டாரநாயக்க, நாலன் மென்டிஸ், சட்டத்தரணி டக்ளஸ் சிறிவர்தன, தீபானி சில்வா, சாந்தனி செனவிரத்ன, இனோக்கா சத்தியாங்கனி உள்ளிட்ட சிரேஷ்ட கலைஞர்கள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்து சிறப்பித்துள்ளனா்.