தேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்க யாருடனும் அணி சேர்வதாக - மஹிந்த.!
தங்களுடன் இணைந்து கொள்ள வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்காமல் இருப்பதற்கு தன்னால் முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வருபவர்கள் தம்மை புறந் தள்ளியவர்களாக இருந்தாலும் தம க்கு எதிராக செயற்பட்டவர்களாக இருந்தாலும் தம்மை விட்டுச் சென்ற வர்களாக இருந்தாலும் அவர்களை வரவேற்பதைத் தவிரவேறு வழியில் லையெனக் கருதுவதாகவும் தெரிவி த்துள்ளாா். மஹரகமநகர சபைக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத் துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
தம்மோடு இணைய வருபவர்களை வரவேற்காவிடின் தாம் தொடர்ந்தும் சிறு குழுவுடன் எதிர்க்கட்சியில் இருப்பதற்கே ஏற்படும் எனவும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
அத்துடன் பிரதேச அரசியலுக்கும் தேசிய அரசியலுக்கும் இடை யிலான வேறுபாட்டை எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டுமெனத் தெரி வித்துள்ளாா்.
ஜனாதிபதியும் பிரதமரும் மாறி மாறி திருடன் என சாடிக்கொள்கின்றனர் எனி னும் தற்பொழுது அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்ற 118 பேர் பட்டியல் வெளியாகியிருக்கின்றது எனவும் இதுதான் இன்று நாட்டின் அரசியல் நில வரம் எனத் தெரிவித்துள்ளாா்.
இதனால், இந்த அரசாங்கத்தை விரைவில் வெளியேற்றுவதற்காக எம்மோடு இணைய வருகின்ற அனைவருடனும் கைகோர்க்க வேண்டியுள்ளதாக இருக் கின்றதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.