இயக்குனர் கவுதமன் கைது.!
சேலம் - சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் எட்டு வழி பசுமை சாலை 277 கிமீ தொலைவுக்கு அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்ட மக் களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தங்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக திகழ்கிற விளைநிலங்களை பசுமை வழி சாலைகளுக்காக அரசு கையகப்ப டுத்துவதை அப்பகுதி மக்கள் துளியும் விரும் பவில்லை.
தங்கள் வாழ்வாதாரத்தினை சீர் குலைக்கும் முயற்சியகாகவே இதனை அவர்கள் பார்க்கின்றனர்.
அதே சமயம், சாலைகள் அமைப்பதற்காக பொது மக்களின் வீடுகள் மற்றும் விளை நிலங் களை கையகப்படுத்த அளவெடுத்து வருகிறது அரசு.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களும், பொதுமக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கின்ற சமூக ஆர்வலர்களும், செயற்பாட்டாளர்களும் உடனடி யாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
அந்த வகையில், நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் முகிலன் உள்ளிட் டோர் எடப்பாடி அரசால் கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் திரைப்பட இயக்குனர் கவுத மனையும் கைது செய்து சிறைப்படுத்தியுள்ளது காவல்துறை.
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தக்கூடாது என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இயக்குநர் கௌதமன் தலைமையிலும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே கவுதமன் கைது செய்யப்பட் டுள்ளாா்.