Breaking News

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் குழப்பம்! இக்கட்டான நிலையில் மக்கள்!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இணைந்தசேவை மேற்கொள்வதில் தனியார் மற்றும் இ.போ.சபைக்கிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா புதிய பேருந்து நிலையத் தில் இன்று யூன் 1ஆம் திகதி முதல் இணைந்த பேருந்து சேவையை மேற் கொள்வதற்கு வடமாகாண சபையி னால் அறிவு றுத்தல் வழங்கப்பட்டுள் ளது. 

இந்நிலையில் இதனை மேற்கொள்வ தற்கு தனியார் சென்றபோது இ.போ.ச சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடையே முரண்பாடு ஏற்பட்டுள் ளதுடன் இணைந்த சேவை மேற்கொள்வதில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. 

அத்துடன் இணைந்த சேவை மேற்கொள்ளுமாறு இ.போ.ச.சாலை சாரதிகளு க்கு அறிவித்தல் தலைமை அலுவலகத்திலிருந்து வழங்கப்படவில்லை என இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்துள்ளனா். 

இந்நிலையில் தனியார், இ.போ.ச பேரூந்துகள் பேரூந்து நிலையத்தில் பேரூந் துகளை தரித்து நிறுத்தாமல் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக (வெளிச் செல்லும் பாதையில்) பேரூந்துகளை தரித்து பயணிகளை ஏற்றுகின்றனர்.

இதன் போது தனியார் பேரூந்து ஒன்று பேரூந்து நிலையத்தில் வெளிச் செல்லும் பாதையூடாக உட்செல்ல முயன்ற சமயத்தில் மீண்டுமொரு குழப்ப நிலை ஏற்பட்டது தமது பயணங்களை மேற்கொள்ளச் சென்ற பயணிகள் பெரும் இக்கட்டான நிலையிலுள்ளதுடன் இணைந்சேவை மேற்கொள்வதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. 

தற்போது பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இது வரை இ.போ.ச, தனியார் பேரூந்து பிரச்சனை சுமுகநிலைக்கு வரவில்லை எனத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.