சக துறைகளின் வளர்ச்சிக்கும் தேவையான சகல வசதிகளிற்கும் ஏற்பாடு செய்வதாக – ஜனாதிபதி
சுகாதாரத்துறை உள்ளிட்ட நாட்டின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் தேவையான சகல விதமான வசதிகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி என்ற ரீதியில் தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரி வித்துள்ளாா்.
நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண் டபத்தில் நடைபெற்ற பதிவு செய்யப் பட்ட மற்றும் உதவி வைத்திய அதி காரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாட் டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.
பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி வைத்திய அதிகாரிகள் கீர்த்திமிக்க சேவை யாளர்கள் என்ற வகையில் நாட்டின் சுகாதாரத் துறைக்காகவும் குறிப்பாக கிராமிய மக்களுக்காக ஆற்றும் சேவைகளை ஜனாதிபதி இதன்போது நினைவு கூர்ந்தார்.
நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண் டபத்தில் நடைபெற்ற பதிவு செய்யப் பட்ட மற்றும் உதவி வைத்திய அதி காரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாட் டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.
சுகாதார அமைச்சராக தான் பணியாற்றியபோது வைத்திய சங்கத்துக்கு பல வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்ததுடன், தற்போ தைய சுகாதார அமைச்சரால் மேற்கொள்ளப்படும் செயற் திட்டங்களையும் ஜனாதிபதி பாராட்டினார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
அன்று அமைச்சர்களாலோ அல்லது அமைச்சின் செயலாளர்களினாலோ முடி வுகள் எடுக்கப்படாததுடன், அவர்களுக்கு மேல் இருந்தவர்களாலேயே முடி வுகள் எடுக்கப்பட்டன.
எனினும் இன்று சகல அமைச்சுக்களும் சுதந்திரமாக தனது செயற்பாடுகளை மேற்கொள்ள ஜனாதிபதி என்ற ரீதியில் தான் வழி வகுத்துள்ளதாகவும் தெரி வித்துள்ளாா்.
முப்பது ஆண்டுகால சேவையை நிறைவு செய்த ஓய்வுபெற்ற மற்றும் தற் போது சேவையில் உள்ள பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி வைத்திய அதி காரிகளுக்கு சிறப்பு விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.
முன்னாள் சுகாதார அமைச்சராக பணிபுரிந்த பீ.எம்.பி.சிறிலுக்கு ஜனாதிபதி யினால் விசேட கௌரவ விருது வழங்கப் பட்டது.
பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மஹிந்த லியனகே ஜனா திபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனா்.