Breaking News

காணாமல் போனோர் அலுவலகத்தை நாடிய மஹிந்த அணி.!

போரை முடிவுக்குகொண்டுவந்த படையினரை பழிவாங்குவதற்காகவே OMP என்ற காணாமல்போனோர் அலுவலகத்தை ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கம் அமைத்துள்ளதாக குற்றம்சாட்டி வரும் முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் அந்த அலு வலகத்தின் உதவியை நாடியுள்ளனா்.

மஹிந்த அணியின் முக்கியஸ்தராக இருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பி னர் உதய கம்மன்பில தலைமையி லான பிவிதுரு ஹெல உறுமய கட்சி யின் இளைஞர் அணியினர், ஸ்ரீலங்கா மத்திய வங்கியின் முன்னாள் ஆளு நர் அர்ஜுன் மகேந்திரனை தேடித்தரு மாறு கோரி OMP அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஸ்ரீலங்கா மத்திய வங்கியில் நடைபெற்ற பிணை முறி விற்பனை மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்தி ரனை கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் ஏற் கனவே சர்வதேச பிடியாணையொன்றையும் பிறப்பித்துள்ளது.

எனினும் சிங்கப்பூர் பிரஜையான பொருளியல் நிபுணரான முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இதுவரை கைது செய்ய முடியாதுள்ளதாகவும் அவர் எங்கு இருக்கின்றார் என தெரியாதுள்ளதாகவும் விசாரணை நடத்திவரும் குற் றப் புலனாய்வு பொலிசாரும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையிலேயே காணாமல் போயுள்ள முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை தேடிக்கண்டு பிடித்துத்தருமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பி னர் உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெலஉறுமயவின் இளை ஞர் அணியினர் OMP அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனா். 

இந்த முறைப்பாட்டில் அர்ஜுன் மகேந்திரன் காணாமல் போயுள்ளதுடன் ஸ்ரீல ங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தொடர்பிருப்பதாக தமது முறைப் பாட்டில் தெரிவித்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமயவின் இளைஞர் அணி யின் செயலாளர் சுகீஸ்வர பண்டார ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளாா்.  

(மத்திய வங்கி மோசடியில் கொள்ளையடித்த ரில்லியன் ரூபா பணத்துடன் காணாமல் போயுள்ளாரா அல்லது யாராவது ஒருவர் அல்லது குழு வரை காணாமல் ஆக்கியதா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. 

அதனாலேயே மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் விவகாரத்தை தேடிக்கண்டு பிடித்துத் தருமாறு கோரிக்கை விடுத்து இம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளோம்.

எமது முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட OMP அலுவலகத்திலுள்ள ஆணையா ளர் ஒருவர் இவ் விடயத்தை முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர், யுத்தத்தின் போது காணாமல் ஆக் கப்பட்டோர் உட்படபோரின் போதும் வேறு காரணங்களுக்கான மோதல்களின் போதும் காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் குழப்பங்கள், வன்முறைகள் மற்றும் கலவரங்களின் போது காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காகவே ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கம் OMP அலுவலகத்தை நிறுவியுள்ளது. 

எனினும் யுத்த காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்காகவே OMP அலுவலகம் நிறுவப்பட்டுள்ளதாக பிவி துரு ஹெல உறுமயவின் இளைஞர் அணியின் செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளாா். 

சுகீஸ்வர பண்டாரவின் கட்சித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில OMP அலுவலகத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பை ஆரம்பம் முதலே தெரிவித்துள்ளனா்.

போரின் போதும், அதற்குப் பின்னரும் யுத்தக்குற்றங்கள் உள்ளிட்ட மூசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக கடும் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினரை தண்டிப்பதற்காகவே OMP அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதாக மஹிந்த அணி யின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்படும் உதய கம்மன்பில தெரி வித்துள்ளாா். 

அதனால் தமது உயிர்களை துச்சமாக மதித்து நாட்டு மக்களின் உயிர்களை பாதுகாத்த படைவீரர்களைகாட்டிக்கொடுக்கும் கொடூரமான மனநிலையுடன் காணப்படும் துரோகிகளாலேயே OMP அலுவலக பிரேரணைக்கு ஆதரவு வழ ங்க முடியுமென அந்த அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டம் இயற்றப்பட்ட போது கூடியவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித் திருந்தாா்.  

எவ்வாறாயினும் தமது அலுவலகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர் பில் நடத்தப்படும் விசாரணைகளின் போது குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டாலும் அவர்களை தண்டிக்கும் அதிகாரம் OMP என்ற காணாமல் போனோர் அலுவலகத்திற்கு இல்லையென அந்த அலுவலகத்தின் தலைவ ரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அண்மையில் முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னிலையில் தெரிவித்துள் ளாா்.