Breaking News

வவுனியாவில் பாலியல் குற்றச்சாட்டான வைத்தியர் அனுப்பிய குறுந் தகவல்கள் அம்பலத்தில்.!

வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகிய வைத்தியரின் உறவினர்கள் தனக்கு பெரு ந்தொகைப் பணம் வழங்க முனைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித் துள்ளார்.

வைத்தியருக்கெதிரான முறைப்பாட் டினை மீளப் பெறுவதற்காகவே 10 லட்சம் ரூபா தொகையினை அவர் கள் வழங்க முற்பட்டதாக அவர் தெரி வித்துள்ளாா். வவுனியா நெளுக்குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவ மனை வைத்தியர், வவுனியா நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவம னையில் பணிபுரியும் பெண்ணொருவரை பாலியல் ரீதியான தொந்தரவு செய் ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியமையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று கொடுக்கப்பட்டுள்ளதுடன்  முறைப்பாட்டின் பிரகாரம் வைத்தியரை கைது செய்த பொலிஸார் மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்திய சமயத்தில் 25ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந் நிலையில் நேற்று முன் தினம் (22.06) குறித்த வைத்தியர் பிணையில் விடுதலையாகியுள்ளாா். பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகிய வைத்தியருக் கெதிரான முறைப்பாட்டை மீளப்பெற்றால், தன்னிடம் குறித்த வைத்தியர் பகி ரங்க மன்னிப்பு கோருவதுடன் 10 லட்சம் ரூபா பணத்தினை தருவதாகவும் அவரது உறவினர்கள் தமது உறவுகளிடம் கேட்டுக்கொண்டதாக அப் பெண் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த வைத்தியர், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அனுப்பிய குறுந் தகவல் வெளியாகியுள்ளதுடன் இவை சான்றுப் பொருள்களாக நீதிமன்றத் தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.