Breaking News

விடுதலை பெறுவாரா ஆனந்த சுதாகரன்? யாழ் இந்திய துணைத் தூதுவரிடம் கலந்துரையாடல்!

யாழ் இந்திய துணைத் தூதுவர் திரு.எஸ்.பாலச்சந்திரன் அவர்களை நேரில் சந் தித்து ஆனந்தசுதாகரனின் விடுதலை தொடர்பாக 22.06.2018 அன்று வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் கலந் துரையாடியுள்ளாா்.

தாயை இழந்தும், தந்தையைச் சிறை யில் அடைக்கப்பட்டதாலும் அனாதர வாக்கப்பட்டு, வயதான பேத்தியாரு டன்; வாழும், இரு சிறுவர்களின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பு மற்றும் இரு சிறார்களின் மன உளைச் சல் எதிர்காலத்தில் பாதிக்காத வகை யில் அரசியல் கைதியான, ஆனந்தசுதாகரனை ஜனாதிபதியின் கருணை அடிப் படையில் விடுவிக்கப்பட வேண்டுமென வடக்குக் கிழக்கு, தெற்கு, மேற்கு என இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மற்றும் சமுக, அரசியல் அமைப்புக்கள் ஏராளமான கையெழுத்துப் போராட்டங்களை நடாத்தியிருந்தன.

ஆனந்தசுதாகரன் கடந்த தமிழ், சிங்கள புத்தாண்டளவில் விடுவிக்கப்படுவார் என்ற செய்தியும் ஜனாதிபதியிடம் இருந்து வெளிவந்தது.

எனினும் அவரது விடுதலையை உத்தரவாதப்படுத்த மேலும் வலியுறுத்தல் கள் தேவை என்ற அடிப்படையில் பிள்ளைகளை நினைத்து தினமும் சிறை யில் தவித்துக் கொண்டிருக்கும் ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக் கோரி கடந்த சில மாதங்களாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மற்றும் வட மாகாணக் கல்வி அமைச்சின் அனுசரணையுடன்,

வடமாகாண கல்விச் சமூக மாகிய கல்விமான்கள், அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோ ரிடம் இருந்து 3 லட்சம் கையெழுத்துக்கள் மாகாணக் கல்வி அமைச்சர் கலா நிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களால் பெறப்பட்டு நேரடியாக ஜனாதி பதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து 22.06.2018 அன்று 3 லட்சம் கையெழுத்துக்கள் மாகாணக் கல்வி அமைச்சரினதும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினரதும் கோரி க்கைக் கடிதங்களுடன் கூடிய மனு யாழ் இந்திய துணைத் தூதுவரிடம் கையளித்து தற்போது தடுப்பில் உள்ள ஆனந்தசுதாகர் ஆயுதப் பயிற்சி பெற்ற ஒருவர் அல்லாது ஒரு அரசியல் கைதியாகவே இருப்பதால் அவரது குழந் தைகள் அநாதையாக்கப்படாது இருப்பதற்காக, இந்திய அரசு அவரது விடு தலையில் கவனம் எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இவ் விடயத்தினை இலங்கையில் உள்ள இந்திய தூதுவரின் ஊடாக பாரதப் பிரதமரிடம் தெரியப்படுத்தி இலங்கை அரசிடம் சிறுவர்களின் எதிர்காலத் தையும் நலனையும் கருத்தில் கொண்டு இவ்விடயம் பற்றி கவனம் எடுப்பதாக வடமாகாணக் கல்வி அமைச்சரிடம் நம்பிக்கை ஊட்டும் முகமாக யாழ் இந் திய துணைத்தூதுவர் திரு.எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.