புலம்பெயர் தமிழர்களுக்கு அதிா்ச்சி நல்லாட்சி அரசு !
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்னவின் கை யொப்பத்துடன் 2018 ஆம் ஆண்டு யூன் மாதம் 20 ஆம் திகதி புதன் கிழ மையான நேற்றைய தினம் வெளி யிடப்பட்டுள்ள விசெட வர்த்தமான அறிவித்தலேயே இத் தடை செய்யப் பட்டுள்ளோரின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய சிறிலங்கா அரசு தடைசெய்யப்பட்டுள்ள புலம்பெயர் தமிழர்க ளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
மைத்ரி – ரணில் தலைமையிலான சிறிலங்காவின் தற்போதைய தேசிய அர சாங்கம் ஆட்சிபீடம் ஏறியதை அடுத்து 2016 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டு, எட்டு புலம்பெயர் தமிழ் அமை ப்புக்கள் மீதும் 267 தனி நபர்கள் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியி ருந்தது.
எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளிட்ட மேலும் எட்டு தமிழ் அமைப்புக்கள் மீதும் 86 தமிழர்கள் மீதும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருந்தது.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன், 15 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும், 424 தமிழர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கான தேர்தலுக்கு எட்டு தினங்களுக்கு முன்னதாகவே இத் தடை பட்டியல் சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்டி ருந்தது.
எவ்வாறாயினும் சுவிஸர்லாந்து நீதிமன்றினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமல்ல என்று தீர்ப்பு வெளியாகி ஒருவாரம் கடந்த நிலையிலேயே சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலை மையிலான அரசாங்கம் புதிய தடைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பது மற்றும் மீண்டும் அந்த இயக்கத்தை மீளக் கட்டியெழுப்பத் துணைபோவதாக குற்றம்சாட்டியே 14 பேர் புதிதாக தடைப்பட்டியலில் இணை க்கப்பட்டுள்ளனா்.
இதற்கமைய சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ள தமிழர்களின் எண்ணி க்கை 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.