Breaking News

பிள்ளையானை விடுதலை செய்யுமாறு போராட்டம்.!

முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) விளக் கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன் னெடுக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் கிழக்கு மாகாண முதல மைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்ட த்தை நீக்கி சுயமாக ஜனநாயகப் பாதையில் ஈடுபட வழி விடுமாறு கோரி தமிழ் மக்கள் விடுதலை புலி கள் கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் ஆகியன இந்த அடையாள உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கம் கொலை தொடர்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட முன் னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 7 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 
இந் நிலையில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி சுயமாக ஜனநாயகப்பாதையில் ஈடுபட வழி விடுமாறு கோரி உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அடையாள உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. 

இதனையடுத்து அங்கு ஒன்று திரண்ட 50 ற்கும் மேற்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை காலை 8 மணிக்கு மட்டு நகர் காந்தி பூங் காவிற்கு முன்னாள் ஒன்று திரண்டு வாயை கறுத்த துணியால் கட்டியவாறு நீக்கு நீக்கு சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தை, கிழக்கின் மைந்தனை விடுதலை செய், யாருக்கு பயங்கரவாத தடை ? எதற்காக? 

பயங்கரவாதம் நீக்கப்பட்ட பின் பயங்கரவாத தடைச்சட்டமா? போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு மௌனமாக அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.