கூட்டமைப்பில் தொடர்ந்து நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக உரிய நேரத்தில் பதில் தருவேன் முதலமைச்சர்.!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்து நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து உரிய நேரத்தில் உரிய பதிலை கூறுவேன் என வடக்கு மாகாண முத லமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபையின் தேர்தலில் போட்டியிடு வேன் என்பது தேர்தலுக்கு மூன்று மாத காலத்திற்கு முன்பு
தான் தெரி யும். எனவே அது அந்தந்த நேரத்தில் நடந்துள்ளதாக முதலமைச்சர் தெரி வித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்.பொது நூலக மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பொன்று இடம் பெற் றது. இதன் போது அங்கு முதலமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில் முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மேலும் அவர் பதிலளித்திருப்பதாவது,
கேள்வி:
தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் மந்த கதி யில் இடம்பெறுவதாக பொதுவாக கூறப்பட்டதே இந்நிலையில் தற்போது இளை ஞர் மாநாடும் வெறுமனே கருத்துருவாக்கமாக மாத்திரமாகவா இருக்கும்.
பதில்:
இதுவரை காலமும் எம்மோடு பொறுப்பான பதவிகளில் இருந்தவர்கள் நடை முறைப்படுத்தியிருந்தார்கள். எனவே அவர்கள் தமது பணிகளையும் கவனித் துக் கொண்டு இவற்றை செய்ய வேண்டியிருந்தது.
ஆனால் தற்போது கூடிய நேரத்தை தம்மிடம் வைத்திருக்க கூடியவர்கள் எம் மோடு இணைந்து நடவடிக்கை எடுக்க முன் வந்துள்ளார்கள். எனவே கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்போம்.
கேள்வி:
வடக்கு மாகாண சபையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற, வடக்கு மாகாணத் தில் உள்ள சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டத் திற்கு நீங்கள் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே.
பதில்:
அக் கூட்டத்திற்கு கடைசி வரை நான் போவதாக இருந்தேன். ஆனால் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக என்னால் அங்கு செல்ல முடியவில்லை. எனி னும் அது தொடர்பாக அவைத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதா வது நீங்கள் முடிவுகளை எடுங்கள் அவற்றுக்கு செயல் வடிவம் கொடுக்கும் போது நான் முதலமைச்சர் என்ற வகையில் அனைத்தையும் செய்வேன் என குறிப்பிட்டிருந்தேன்.
கேள்வி:
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் இராணுவத்தின் செயற்பாடு இருக்க கூடாது என யாழ்.மாநகர சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது. அத் துடன் மாகாண சபையிலும் இது தொடர்பாக பேசப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் மர நடுகை நிகழ்வின் போது இரா ணுவத்தோடு இணைந்து நீங்கள் அதில் பங்குபற்றியுள்ளீர்களே.
பதில்:
அது வடக்கு மாகாண ஆளுநர் யாழ். மாநகர சபை மேயர் இராணுவத்தோடு சேர்ந்து இந் நடவடிக்கைளை முன்னெடுத்திருந்தனர். இந்த நேரத்தில் அதனை புறக்கணித்தால் அது எங்கள் மக்களை தான் பாதிக்கும்.
மேலும் எல்லா விடயங்களையும் நாம் அரசியல் ரீதியாக பார்க்கக் கூடாது. எமக்கு வருகின்ற நன்மைகளையும் நாம் பார்க்க வேண்டும். அத்தோடு இரா ணுவமே மரங்களை வெட்டியது.
எனவே அவர்களே அத னை நாட்டி தரட்டும்.
எனினும் இச் செயற்திட்டமானது என்னிடம் பேசப்பட்டு எங்களுடாக செய்யப்பட்டிருந்தால் நான் நிச்சயம் இத ற்கு இடம்கொடுத்திருக்க மாட்டேன்.
கேள்வி:
நீங்கள் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க போவதாக பரவலாக பேசப் படுகின்றதே ?
பதில்:
நானும் அவ்வாறு தான் கேள்விப் பட்டேன். அந்தளவே எனக்கும் தெரியும். எத ற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.
கேள்வி:
தமிழ் மக்கள் பேரவை அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்டியிடுமா?
பதில்:
பேரவை சார்பில் ஒருவரையும் நியமிக்க மாட்டோம். ஆனால் பேரவையின் அனுசரணையில் யாராவது முதலமைச்சர் வேட்பாளராக வரக்கூடும்.
கேள்வி:
நீங்கள் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான முன்னேற்றம் இடம்பெறுவதாக கூறப்படுகின்றதே ?
பதில்:
முன்னேற்றம் ஒன்று நடைபெற் றுக்கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் அது கட்சி ரீதியானது என நான் பார்க்கவில்லை.
கேள்வி:
அடுத்த மாகாண சபை தேர்த லில் நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவீர்களா ?
பதில்:
2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபையின் தேர்தலில் போட்டியிடுவேன் என்பது அதற்கு மூன்று மாத காலத்திற்கு முன்பு தான் தெரியும். எனவே அது அது அந்தந்த நேரத்தில் நடந்துள்ளது.
இந்நிலையில் தற்போது இது தொடர்பாக உறுதியாக எதனையும் கூற முடி யாது. எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அடுத்த மாகாண சபை தேர்த லில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பாக உரிய நேரத்தில் உரிய பதிலை கூறுவேன் எனத் தெரிவித்துள்ளாா்.