Breaking News

20 ஆவது திருத்த சட்­ட­மூலம் தமி­ழீ­ழத்தை உரு­வாக்கும் என்கிறாா் - விமல்.!

புலம்­பெயர் அமைப்­பு­களின் தேவை­க­ளுக்­காக நாட்­டினை மாற்­றி­ய­மைக்­க­வுமே ஐக்­கிய தேசியக் கட்சி முயற்­சித்து வரு­கின்­றது என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச எம்.பி. தெரி­வித்துள்ளாா்.  

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் வகையில் மக்கள் விடு­தலை முன்­னணி தனி நபர் பிரே­ர­ணை­யாக கொண்­டு­வந்­துள்ள 20ஆம் திருத்தம் குறித்து கருத்து தெரி­விக் கும் போதே இவ்வாறு தெரிவித்துள் ளாா்.

 மேலும் கூறு­கையில்......... 

ஐக்­கிய தேசியக் கட்சி புலம்­பெயர் புலி அமைப்­பு­க­ளுக்கு கொடுத்­துள்ள வாக் குறுதிகளை நிறை­வேற்றும் வகையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை மையை இல்­லா­தொ­ழித்து அதன் மூல­மாக வடக்கு மாகா­ண­சபை தடைகள் இன்றி செயற்­ப­டவும், புலி­களின் செயற்­பா­டுகள் மீண்டும் பல­ம­டை­யவும் பிரத மர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முய­ற்­சிக்­கின்றார். 

அவ்­வாறு பிர­தமர் நினைக்கும் தேவைக்கு ஏற்­பவே மக்கள் விடு­தலை முன் னணி 20 ஆவது திருத்தச் சட்­டத்தை கொண்டு வரு­கின்­றது. பிரதமரின் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வதில் ஜே.வி.பி. யின் பங்­க­ளிப்பே அதி­க­மாக உள்ளது. 

அதற்­கா­கவே தனி நபர் பிரே­ர­ணை­யாக 20 ஆவது திருத்த சட்­டத்தை கொண்­டு­வந்து நிறை­வேற்றி ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக இல்லாதொழிக் கும் நட­வ­டிக்­கை­களை ஜே.வி.பி. கையாண்டு வரு­கின்­றது. 

மக்கள் வாக்கு மூல­மாக நாட்­டுக்­கான ஜனா­தி­பதி ஒரு­வரை தெரிவு செய்து நாடினை ஆளு­வதா அல்­லது அர்­ஜுன மகேந்­திரன் போன்­ற­வர்­களின் பணத்­திற்கு விலை­போன அர­சாங்­கத்தைக் கொண்டு அவர்­க­ளுக்கு ஏற்றாற் போல் ஒரு ஜனாதிபதியை கொண்டு ஆட்­சியை நடத்­து­வதா சிறந்­தது என்­பதை மக் கள் தீர்மானிக்க வேண்டும். 

தற்போது வடக்கு மாகாண சபை தனி இராஜ்­ஜியம் கோரும் நோக்­கி­லேயே தனது நகர்வுகளை முன்னெடுத்து செல்கின்றது என்றார்.