Breaking News

பிரபாகரன் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? கொதித்தெழுந்த தமிழ் மக்கள்!

யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திரு விழா தொடர்பில் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளதுடன், தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இப்படி யெல்லாம் நடந்திருக்குமா என பொதுமக்கள் கோபத்துடன் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

யாழ். வரணி வடக்கு சிமில் கண் ணகை ஆலய வருடாந்த தேர் உற்ச வம் நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில் குறித்த ஆலயத்தில் நேற்று (07.06.2018) காலை ஆயிரக் கணக்காண பக்தர்கள் படை சூழ்ந்தி ருந்த போதும் அந்தப் பகுதியில் முத லாவது சமூக வர்க்கத்தினர் என தம்மை தாமே அடையாளப்படுத்திய சிலர் குறித்த தேரின் வடத்தை பிடித்து இழுக்கும் உரிமை ஏனைய பக்தர்களுக்கு இல்லையென தெரிவித்து அவர் களை தேரை இழுக்க அனுமதிக்கவில்லை. 

அத்துடன் தேரை இழுக்கும் சக்தி (ஆட்கள் பலம்) அவர்களிடம் காணப்பட வில்லை, இதனால் அவர்கள் jcb இயந்திரம் மூலம் தேர்வடம் பிடித்து இழுத் துள்ளமை உலகெங்கும் வாழும் இந்து மத மக்களுக்கு மட்டுமில்லாமல், ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் தலைவர் பிரபாகரன் உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்த காலப்பகுதியில் சாதிகள் போன்ற பிரிவினை வாதங்கள் இல் லாமால் தமிழர் என்ற ஒரே அடையாளத்துடன் வாழ்ந்து வந்த எம் தமிழ் இனம், தற்போது தலைவர் பிரபாகரன் இல்லாததால் எங்கள் இனம் பின்னோக் கிய சிந்தனையில் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது என்பதை இச் சம்பவம் உணர்த்துகிறது. 

இலங்கையில் சிங்கள மக்களுடன் ஒப்பிடுகையில் மிகச்சிறிய எண்ணிக்கை யில் வாழ்ந்து வரும் நாம் பல உயிர்களை கடந்த யுத்தத்தில் இழந்த நிலை யில் ஒரு நிரந்திர தீர்வுக்காக போராடிக்கொண்டிருக்கும் இந் நேரத்தில் ஒற்று மையாக இல்லாமல் எங்களுக்குள் சாதிகள், மதங்கள் என்று மோதிக் கொண் டால் எங்கள் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறிதான் என இளைஞர்கள் மற் றும் பொதுமக்கள் தங்கள் கோபங்களுடனான ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனா்.