முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை விரைவில் - சாலிய பீரிஸ்.!
காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களிடமிருந்து முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டு விசாரணைகளை ஆரம்பிக்கும் நடவ டிக்கைகளை விரைவில் ஆரம்பிப் போமெனவும் அவசியமான ஒதுக்கீடு கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பமாகுமெனவும் தெரிவித் துள்ளாா்.

மன்னார் மாத்தறை முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமல் போன வர்களின் உறவினர்களை சந்தித்தாக தெரிவித்துள்ள சாலிய பீரிஸ் எதிர் வரும் 13 ம் திகதி திருகோணமலையில் காணாமல் போனவர்கள் குறித்த அலுவல கத்தின் அமர்வு நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகத்திற்கான ஆணையாளர்களை ஜனாதிபதி நியமித்தததை தொடர்ந்து பெப்ரவரி 28 ம் திகதி ஆணையகம் தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.