வடக்கில் வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பு சீனாவிற்கு.!
வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப் பட்ட மக்களிற்கு 40,000 வீடுகளை கட்டுவ தற்காக சீனா நிறுவனமொன்றிற்கு அமைச் சரவையின் அனுமதியை மீள்குடியேற்ற அமைச்சு கடந்த மாதம் பெற்றுக் கொடுத் திருந்தது.
மலையகத்தில் மண்சரிவால் பாதிக்கப் பட்ட மக்களிற்கு வீடுகளை கட்டுவதற்கான அனர்த்த முகாமைத்துவ அமைச் சும் இந்த நிறுவனத்திற்கே அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை இலங்கையில் ஒரு வீட்டை கூட கட்டாத சீனா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியமை குறித்து இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது வடபகுதி குறித்து அறிமுகம் இல்லாத அந்த பகுதியின் மண் மற்றும் காலநிலை குறித்து அறிந்திராத நிறுவனத்திற்கு எப்படி முழுமையான ஆய்வொன்றை மேற் கொள்ளாமல் அனுமதி வழங்கலாம் என இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.
வடக்கில் கிழக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் உரிய விதத்தில் நேர்மை யாக முன்னெடுக்கப்படுவது குறித்து இந்தியா ஆர்வம் கொண்டுள்ளது என அர சியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வீடமைப்பு திட்டத்தில் எத்தனை சீனா தொழிலாளர்கள் பயன் படுத்தப்படுவார்கள் என்பது தெரியவில்லை இதுவும் கவலையை ஏற்படுத்தி யுள்ளன.