Breaking News

அமெரிக்காவின் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடும் ஈழத் தமிழர்கள்.!

அமெ­ரிக்­காவின் மேரிலன்ட் மாகா­ணத்தின் இரண்டு முக்­கிய பத­வி­க­ளுக்கு, உடன் பிறந்­த­வர்­க­ளான இரண்டு தமி­ழர்கள் போட்­டி­யி­டு­வ­தாக, பால்­ரிமோர் மகசின் என்ற ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேரிலன்ட் மாகாண ஆளுநர் பத­வி க்கு, கிரி­சாந்தி விக்­ன­ராஜா என்ற பெண் போட்­டி­யி­டு­கிறார். அவ­ரது சகோ­த­ர­ரான திரு எனப்­படும் திரு­வேந்­திரன், அதே மாகா­ணத்தின், பால்­ரிமோர் நகர அரச சட்­ட­வாளர் பத ­விக்குப் போட்­டி­யி­டு­கிறார். கிரி­சாந்தி முன்னர், வெள்ளை மாளி­கையில் மிச்சேல் ஒபா­மாவின் கொள்கை பணிப்­பா­ள­ராக இருந்­தவர். 

கிரி­சாந்­தியும் அவ­ரது அண்ணன் திருவும், குழந்­தை­க­ளாக இருந்தபோது, அவ­ரது பெற்றோர், இலங்­கை­யி­லி­ருந்து போரினால் இடம்­பெ­யர்ந்து, பால்­ரிமோர் நகரில் குடி­யே­றினர். இவர்­களின் பெற்றோர் பால்­ரிமோர் நகர பாட­சா­லையில் ஆசி­ரி­யர்­க­ளாக பணி­யாற்­றினர். 

ஹவார்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் சட்டம் பயின்ற திரு, ‘ஹவார்ட் லோ ரிவியூ’ இத ழின் ஆசி­ரி­ய­ராகப் பணி­யாற்­றினார். அவ­ரது சகோ­த­ரி­யான கிரி­சாந்தி யேல் பல்­க­லைக்­க­ழ­கத்தில் அர­சியல் விஞ்­ஞானம் படித்தார். இவர்கள் இரு வரும் இப்போது மேரி லன்ட் மாகாணத்தின் இரண்டு முக்கியமான பதவிகளு க்காக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.