Breaking News

லண்டனிலிருக்கும் கணவரே குழந்தையின் கடத்தலுக்கு காரணமென தாய் முறைப்பாடு

வீட்டில் தாயுடன் உறங்கிக் கொண்­டிருந்த 8 மாத ஆண் குழந்தை ஒன்­றினை வேன் ஒன்றில் வந்த குழு­வினர் கடத்திச் சென்­றுள்­ளனர்.

வவு­னியா, குட்செட் வீதி, முதலாம் ஒழுங்­கையில் நேற்று அதி­காலை 2 மணி­ய­ளவில் குறித்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. இதே­வேளை லண்­ட னில் உள்ள கண­வனே இந்த கடத்­தலை மேற்­கொண்­ட­தாக தாயார் பொலிசில் முறைப்­பாடு செய்­துள் ளார். 

 மேலும் தெரி­ய ­வ­ரு­வ­தா­வது, 

வவு­னியா, குட்செட் வீதி, முதலாம் ஒழுங்­கையில் வசித்து வரும் 22 வய­து­டைய யுவதி ஒருவர் லண்­டனைச் சேர்ந்த இளைஞர் ஒரு­வரை இந்­தியா சென்று திரு­மணம் செய்­துள்ளார். 

கணவன் லண்டன் சென்­றதும் குறித்த யுவதி வவு­னி­யாவில் தனது தாயா­ரு டன் வசித்து வந்­துள்ளார். இவர்­க­ளுக்கு ஒரு ஆண் குழந்­தையும் பிறந்­துள்­ளது. இந்­நி­லையில் கணவன் ஏற்­க­னவே திரு­மணம் செய்­தவர் என்­பது தெரி­ய­வந்­ததன் கார­ண­மாக இரு­வ­ருக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் ஏற்­பட்டு கடந்த 5 மாதங்­க­ளாக குறித்த யுவதி கண­வ­னு­ட­னான தொடர்பை துண்­டித்­துள் ளார். 

இதன்­போது கணவன் தனது குழந்­தையை தரு­மாறு மிரட்­டி­ய­துடன், குழந்­தையை கடத்­துவேன் எனவும் தொலை­பே­சியில் மிரட்­டி­யுள்­ள­தாக பொலிஸ் முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இந்த நிலையில் அதி­கா­லையில் தாயா­ருடன் குழந்தை உறங்கிக் கொண்­டி­ருந்த போது வான் ஒன்றில் வந்த 6 இற்கும் மேற்­பட்டோர் வீட்டு கதவை உடை த்து உள்ளே நுழைந்து உறங்கிக் கொண்­டி­ருந்த குழந்­தையை தூக்கிச் சென்­றுள்­ளனர். 

குழந்தை கடத்­தப்­பட்டு சிறிது நேரத்தில் லண்­டனில் உள்ள கணவன் தொலை­பே­சியில் அழைப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தார். இதனால் இக் கடத்தல் தனது கண­வனால் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக மனைவி குற்றம் சுமத்தியுள்ளார்.

8 மாத ஆண் குழந்­தை­யான வானிஷன் எனும் குழந்­தையே இவ்­வாறு கடத்­தப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் வவு­னியா பொலி­சா­ருக்கு கிடைத்த முறைப்பாட் டையடுத்து தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.