பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சுட்டுக்கொலை.!
உருஹஸ்மன்ஹந்தவில் நடைபெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் உயி ரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளரான டொனா ல்ட் சம்பத் என பொலிஸார் தெரி வித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத துப்பாக்கி தாரிகளே இவர் மீது துப்பாக்கிப் பிர யோகத்தை மேற்கொண்டு விட்டு தப் பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணை களை முன்னெடுத்துள்ளனா்.