Breaking News

ரஜினியை எதிர்த்து ! பிரித்தானிய திரையரங்குகளில் தன்மானத்தமிழர் படை.!

ஒன்றிற்கும் கருத்து கூறாத நடிகர் ரஜினிகாந் நடந்து முடித்த தூத்து குடி துயரத் திற்கு கருத்து தெரிவித்துள்ளாா். 

அது அவரின் சினிமா வாழ்க்கைக்கும், எதிர் கால அரசியல் ஆசைக்கும் பெரும் சறுக்கலாக அமைந்துள்ளது. பாதிக்கபட்ட மக்களை பார்த்து விட்டு பத்திரிகை யாளர்களை சந்தித்த போது அவர் நடந்து கொண்ட விதமும் அங்கு தெரி வித்த கருத்துக்களும் தமிழ்மக்களின் உண ர்வை சீண்டுவதாக அமைந்துள்ளது.  

அவரின் நடவடிக்கைக்கு எதிர்வினையாக அவ ரின் நடிப்பில் வெளியாகவிருக் கும் காலா திரைப்படத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண் டுமெனக் கோரிக்கை உலகம் முழுவதிலிருந் தும் எழுப்பப்பட்டவாறு உள்ளன. 

நோர்வே சுவிஸ் நாடுகளுக்கான திரைப்பட விநியோகித்தர்கள் தம் நாடுகளில் படம் வெளியிடப்படாதென அறிவித்து அதிரடி காட்டினார்கள். இந்த நிலையில் பெருமளவான தமிழர்கள் வாழும் பிரித்தானியாவில் திரைப்படம் வெளியா குமா வெளியாகாதா??

எனும் குழப்பமான நிலையில் நேற்றைய தினம் அந்நாட்டின் சினிமா திரை யரங்குகள், பொது இடங்கள் வர்த்தக நிலையங்கள் என நாடு முழுவதும் பரவ லாக “தன்மானத் தமிழர் படை” என்ற பெயரில் ரஜனியையும் காலாவையும் புறக்கணிக்குமாறு சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன. 

 இதனால் அங்கும் திரைப்படம் வெளியாகுமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.