Breaking News

நீட் தேர்வில் தோல்வியடைந்த விழுப்புரம் மாணவி தற்கொலை!

நீட்தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வின் முடிவுகள் இந்தியா முழுவதும் நேற்று வெளி யீடு செய்யப்பட்டன. 1,14,602 தமிழக மாணவர்கள் எழுதிய இத்தேர்வில், 45,336 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி யடைந்துள்ளனா். 60 சத வீத தமிழக மாணவர்களால் தேர்ச்சி பெற முடிய வில்லை. இந்நிலையில் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால், விழுப் புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா, நேற்று எலி மருந்து விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளாா். 

12-ம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்த பிரதீபா, கடந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வின் பொழுது 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தார். தனியார் மருத் துவ கல்லூரியில் சேர்வதற்கான மதிப்பெண்கள் இருந்தும், குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாததால் மீண்டும் இந்த ஆண்டு நீட்தேர்விற்கு முய ற்சி செய்துள்ளார். 

ஆனால் இந்த வருடம் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்ததால் மனமுடைந்த பிரதீபா தற்கொலை முடிவினை எடுத்துள்ளார். முன்னதாக நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் அரியலூரை சேர்ந்த அனிதா தற் கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் சோகத் தில் ஆழ்த்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இம் மாணவிக்கு எமது இணையம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரி வித்துக்கொள்கின்றோம்.