Breaking News

இலங்கையில் நடக்கும் இரட்டை ஆட்சியில் அகப்பட்டு அழிந்தது கூட்டமைப்பே.!

பிரதமர் ரணில் தலைமையில் பாராளுமன்ற ஆட்சி மீது ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன கடும் கோபமும் ஆத்திரமும் கொண்டுள்ளார். தனது கோபத்தை அவர் வெளிப்படையாகக் காட்டியுள்ளார். 

நூறு நாள் வேலைத்திட்டத்தை மட மைத்தனமான செயற்பாடு என்று ஜனாதிபதி மைத்திரிபால விமர்சித்தி ருப்பதில் இருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரப்பு மீதான எதிர்ப்பு எவ்வாறாக உள்ளதென்பதை உணர் ந்து கொள்வதில் அதிக கடினம் இரு க்க முடியாது. 

இது தவிர ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன ஒரு பக்கமாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னொரு பக்கமாகவும் ஆட்சி நடத்தி வருவதையும் உணரமுடிகின்றது. அதாவது இப்போது இலங்கையில் இரட்டை ஆட்சி நடக்கி றது என்பதை ஏற்றுத்தானாக வேண்டும். 

இந்த இரட்டை ஆட்சியின் போக்கை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வட பகுதிக்கு விஜயம் செய்து இங்கு கூறிய கருத்துக்க ளும், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு ஆற்றிய உரையும் உறுதி செய்துள்ளதென லாம். 

போருக்குப் பின்பு இலங்கையில் ஏற்பட்ட இந்த இரட்டை ஆட்சியில் இனப் பிர ச்சினைக்கான தீர்வு சாத்தியப்படப் போவதில்லை என்பது சர்வநிச்சயம். தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பக்கமாக நின்று கொண்டதால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆத்திரத்துக்கு ஆளாகிக் கொண்டனர்.  

போருக்குப் பின்பு இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனவால் சாத்தியப்படும் என்றே மக்களும் சர்வதேச சமூகமும் நம் பினர். தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற மனஉறுதியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்தது.

வடபகுதிக்கு விஜயம் செய்கின்ற போதெல்லாம் இடம்பெயர்ந்த மக்களைச் சந் தித்து அவர் களின் அவலநிலையை நேரில் அவதானித் தவர் ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன. அதேநேரம் வடக்கு மக்கள் படும் அவலத்தைப் பேரினவாதி கள் இங்கு வந்து பார்க்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தவர். 

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து அவர் பின்னால் நின்றதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனா திபதி மைத்திரிக்கு வெறுப்புக்குரியவர்களாகினர். 

இந்த நிலைமை இப்போது அனைவராலும் உணரப்பட்டுள்ளது. ஆக, இலங்கை யில் நடக்கும் இரட்டை ஆட்சியில் அகப்பட்டு அழிந்தது தமிழ்த் தேசியக் கூட் டமைப்பாகவே இருக்கும். 

இதை நாம் கூறும்போது, தமிழர்களுக்கும் பாதிப்பல்லவா என்று யாரேனும் கேட்டால், ஒரு புதிய அரசியல் தலைமையில் தமிழினம் மீண்டும் தழைக்கும் என்பதையே பதிலாக்க முடியும்.