பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டியது அவசியமாகும்.!
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்கு மாற்றீடாக மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் அதேபோல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் பயங்கரவாத த்தை முறியடிப்பது என்ற பேரில் பாரிய அளவில் மனித உரிமை மீறல் கள், சித்திரவதைகள் இடம்பெற்றன என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளாா்.
கடந்த காலங்களில் பயங்கரவாத த்தை முறியடிப்பது என்ற பேரில் பாரிய அளவில் மனித உரிமை மீறல் கள், சித்திரவதைகள் இடம்பெற்றன என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளாா்.
காணாமல் போனோர் ஆணைக்குழு உருவாக்கப்பட்டதின் பின்னர் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று மனித ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நேற்று அதன் தலைமை அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இன்று சர்வதேச மனித உரிமைகள் தரப்படுத்தலில் "ஏ " தரத்தினை பெற்றுள்ளது. இதற்கு கடந்த காலங்களில் நாட் டில் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமைகள் சார் நடவடிக்கைகளே காரணமா கும்.
குறிப்பாக இம்முறை எமக்கு இந்த அங்கீகாரம் கிடைக்க 19ஆம் திருத்தம் மற்றும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் என்பவை காரணிகளாக அமைந்துள்ளன. மனித உரிமைகளை பாதுகாப்பதில் எமது செயற்பாடுகள் உயர்வாக உள்ளன என்பதை அடையாளப்படுத்தியுள்ளனர்.
எனினும் எமக்கு இன்றும் சில நெருக்கடிகள் உள்ளன. ஆணைக்குழு அதிகாரிகள், நி்ர்வாகிகள் பற்றாக்குறை உள்ளது. எமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரணை செய்யக்கூடிய அதிகாரிகள் போதியளவு இல்லை.
நாம் தேசிய ரீதியில் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படல் அவசியமாகும். மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள பிரதான கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
பயங்கரவாத தடைச்சட்டம் நிலவிய உச்சகட்ட காலங்களில் நாட்டில் பாரிய அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன.
தேசிய பாதுகாப்பு விடயத் தில் அக்கறை இருக்க வேண்டும். அதற்கான சட்டங்கள் இருக்க வேண்டும்.
ஆனால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் இறுக்கமான தன்மைகள் தடுக்கப்பட வேண்டும். ஆகவே தான் மாற்று சட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டியுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு அதில் வெற்றிடத்தை ஏற்படுத்த வேண்டும் என நாம் கூறவில்லை.
நீக்கப்படும் சட்டத்திற்கு பதிலாக தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் மாற்று சட்டம் ஒன்றினை கொண்டுவர வேண்டும். ஆனால் கடுமையான தன்மைகளை நீக்க வேண்டும். உதாரணமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒருவரை 18 மாதங்கள் நீதிமன்ற அனுமதி இல்லாது தடுத்து வைக்க முடியும்.
அதேபோல் கைதுசெய்யப்பட்ட நபர் எந்த முறையிலும் மனித உரிமை மீறலுக்கு உள்ளாக்கப்பட கூடாது. அவர் பயங்கரவாத சந்தேக நபராகவோ அல்லது மரண தண்டனை கைதியாகவோ இருக்கலாம். அது முக்கியம் இல்லை.
மனித உரிமைகள் என்பது அனைவருக்கும் சமமானது.
உரிய விசாரணைகளும் இடம்பெற வேண்டும். அதற்கு மாற்று நடவடிக்கைகளை கையாள வேண்டும்.
கடந்த யுத்த கால சூழலில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் மீது கடுமையான சித்திரவதைகள் இடம்பெற்றன என்பதை மறுக்க முடியாது. எனினும் இவற்றை தடுக்க வேண்டும்.
சித்திரவதைகள் என்பதை தவிர்த்து புலனாய்வு மூலமாகவும் மனநிலை சார் மருத்துவ மற்றும் தொழிநுட்ப முறைகளிலும் உண்மைகளை கண்டறிய முடி யும். இதில் புலனாய்வு துறையினரது பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
உலக நாடுகளில் இவற்றை கையாண்டு வருகின்றனர்.
எமது நாட்டிலும் அதனை கையாள வேண்டும். சில நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன அவர்கள் ஆதிக்கத்தை தக்க வைக்க சித்திரவதைகளை கையாண்டு வருகின்றனர் என்ற காரணத்தினால் நாமும் மனித உரிமைகளை மீறவேண்டும் என்ற கருத்தை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.
கடந்த காலங்களில் பயங்கரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் பாரிய அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன. சித்திரவதைகள் இடம்பெற் றன. அதனை மூடி மறைக்க ஏனையோர் செய்கின்றனர் நாம் செய்தால் என்ன என்ற காரணியை கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது.
காணாமல் போனோர் காரியாலயம் உருவாக்கப்பட்டுள்ளமை வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்க நாம் துரித மாக செயற்பட வேண்டியுள்ளது.
இதில் காலாவதியான சட்ட முறைமைகளை வைத்துக்கொண்டு இயங்க முடியாது.
புதிய சட்டங்களை உருவாக்கி நடவடிக்கைகளை கையாள வேண்டும்.
புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் என்பதை அரசாங்கத்திற்கும் தெரிவித்துள்ளோமெனத் தெரிவித்துள்ளாா்.