Breaking News

மஹிந்தவே இராணுவத்தை காட்டிக்கொடுத்ததாக அமைச்சர் விஜயதாஸ.!

யுத்தக் குற்றச்சாட்டில் இலங்கை இராணு வத்தை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கவோ, அல்லது சர்வதேச தரப்பு முன்வைக்கும் இராணுவ குற்றச்சாட் டுக்களை ஏற்றுக் கொள்ளவோ எமது அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை என உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித் துள்ளாா். 

இராணுவ தண்டிப்புக்கு கதவுகளை திறந்துவிட்ட மஹிந்த ராஜபக்ஷ அர சாங்கம் இன்று எம்மைக் குறை கூறு வது வேடிக்கை எனத் தெரிவித்துள் ளாா். 

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக் கிழமை தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்த) சட்டமூலம் குறித்த இரண் டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக் கையிலேயே இவ்வாறு தெரிவித்துள் ளாா். 

எமது ஆட்சியில் ஒருபோதும் இராணுவ காட்டிக்கொடுப்பு நடைபெற்ற வில்லை. நான் நீதி அமைச்சராக இருந்த போது ஐரோப்பிய பாராளுமன்ற பிரதி நிதிகள் மற்றும் ஜேர்மனிய இராஜதந்திரிகள், பிரதிநிதிகள் என்னை சந்தித்து கலப்பு நீதிமன்றம் அமைக்க கேட்டதுடன், இராணுவத்தை விசாரிக்கும் நீதி மன்ற பொறிமுறை ஒன்றினை எவ்வாறு உருவாக்கப்போகின்றீர்கள், எப் போது, எந்த அடிப்படையில் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளனா்.

எனினும் நாம் இராணுவத்தை ஒருபோதும் தண்டிக்கப் போவதில்லை. காட் டிக்கொடுக்க போவதில்லை. இராணுவத்தை கையாளும் விதத்தில் தெரேசா மே என்ன யுக்திகளை கையாண்டாரோ அதே கொள்கையை தான் நாமும் பின் பற்றப்போகின்றோம் என்பதை உறுதியாக தெரிவித்துள்ளேன்.

யுத்த குற்றம் என்ற குற்றச்சாட்டை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவ தில்லை. எனினும் இராணுவத்தை தண்டிக்கபோவதாக கூறும் நபர்கள் கடந்த காலத்தில் இராணுவத்தை தண்டிக்க கதவுகளை திறந்தனர் என்பதை மறந்து விடக் கூடாது.

யுத்தம் முடிவுக்கு வந்து 48 மணித்தியாலம் கடக்க முன்னர் ஐக்கிய நாடுகள் செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி நிலைமைகளை கூறினீர்கள். மேலும் கூறுகையில், அதன் பின்னரே நாட்டில் தருஸ்மான் குழு செயற்பட ஆரம்பித்தது.

அதன் பின்னரே இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. சர்வதேச விசாரணை ஒன்று உரு வாக்கப்பட வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கையும் அதன் பின்னரே எழுந்தது.

இதற்கு முன்னர் இலங்கையில் சர்வதேச தலையீடுகள் ஏற்படும் நோக்கில் ரோம் உடன்படிக்கை செய்துகொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்ட போது அப் போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க உடன்படிக்கையில் பாரா தூரமான தன்மைகளை கவனத்தில் கொண்டு உடன்படிக்கையை கைச் சாதி டாது நிராகரித்தார்.

எனினும் அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் தான் பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. அதன் பின்னரே சர்வதேச எம்மை நெருக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்தது. எவ்வாறு இருப்பினும் எமது ஆட்சியில் எமது இராணுவத்தின் மீதான பொய்யான குற் றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரித்து சர்வதேசம் எம்மை ஏற்றுக் கொள்ளும் நகர்வுகளை முன்னெடுத்துள்ளோம்.

இனியும் நாம் எமது இராணுவத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெ டுப்போம். அதில் எந்த சந்தேகமும் எழப்போவதில்லை. எனினும் முன்னைய ஆட்சியாளர்கள் எம்மை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது.