வழமைக்கு திரும்பிய தபால் சேவை.!
அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்க உறுப்பினர்கள் கடந்த 2 நாட்களாக முன்னெடுத்த அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டிருந்த தபால் சேவைகள் நேற்று புதன்கிழமை வழமைக்கு திரும்பியுள்ளது.
தபால் உத்தியோத்தர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.00 மணிமுதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.00 மணிவரை அடையாள வேலை நிறு த்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவ் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக வட க்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தபால் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.