காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை கையளிக்க படை அதிகாரிகள் மறுப்பு
போர் நடைபெற்ற காலத்திலும் இறுதிப் போரின்போதும், காணாமல் ஆக்கப் பட்டவர்களின், பெயர் விபரங்களை வெளியிடவுள்ளதாக அரசாங்கத் தகவல் கள் பரவியுள்ளன.
ஆனாலும் பாதுகாப்பு அமைச்சின் உயர், அதிகாரிகள் அதற்கு இணங்க வில்லையென உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. கொழும்பை மைய ப்படுத்தியுள்ள, காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலை வர் சாலிய பீரிஸ், இறுதிப்போரில் படை உயர் அதிகாரிகளிடம் சரணடைந்த போராளிகளின் விபரங்களை, கோரி யதாகவும், ஆனால் முழுமையான விபரங்கள் தங்களிடம் இல்லையென அவ ர்கள் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனீவா மனித உரிமைச் சபையின் இலங்கை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் எதிர்வரும ஓகஸ்ட் மாதம் அல்லது செப்ரெம்பர் மாதம் நடைபெறலாம் என வும் அதற்கு முன்னதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை வெளியிட அரசாங்கம் முற்படுவதாகவும் அரச உயர் அதிகாரி ஒருவர் தெரி வித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம், மற்றும் மனித உரிமை மீறல் குற் றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள், போர்க்குற்ற விசாரணைகள் உள் ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கம் தீர்வு காண வேண்டு மென வலியுறுத்தி, ஜெனீவா மனித உரிமைச் சபை இரண்டு வருட கால அவ காசம் வழங்கியிருந்து.
ஆகவே, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள, ஜெனீவா மனித உரி மைச் சபையின், அமர்வுக்கு முன்னதாக, குறைந்த பட்சம், காணாமல் ஆக்கப் பட்டவர்களின், பெயர் விபரங்களை வெளியிட அரசாங்கம் முற்படுவதாகவும் ஆனால் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் படை உயர் அதிகா ரிகள் ஒத்துழைக்க மறுப்பதாகவும் அந்த அரச உயர் அதிகாரி மேலும் தெரி வித்துள்ளாா்.
அதேவேளை, அரசாங்கத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் அரசியல் தேவை களுக்காக. இலங்கை அரசு என்ற கட்டமைப்பையும் அதன் முப்படைகளை யும், சர்வதேச அரங்கில் காட்டிக் கொடுக்க முடியாதென படை உயர் அதிகாரி ஒருவர், காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.