மஹிந்த தனது கழுத்தை அறுத்து தற்கொலையாகும் தருணம் வந்து விட்டது!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தனது கழுத்தை அறுத்து தற் கொலை செய்துகொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும், சமூக வலுவூட்டல் பிரதியமைச்சரமான ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனமொன்றிடம் 7.6 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டதாக அமெரிக் காவின் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ச நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
2015-ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத் திற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு 7.6 மில்லியன் அமெ ரிக்க டொலர்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்த சீனா ஹார்பர் நிறுவனம் வழங்கிய தாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இச் செய்தி தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யிருப்பதோடு அரசியல் களத்திலும் பெரும் பேசுபொருளாக அமைந்திருக் கின்ற போதிலும் இதுகுறித்து மஹிந்த ராஜபக்ச இதுவரை எந்தவித கருத்தை யும் வெளியிடவில்லை.
இந் நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையில் இடம்பெற்றுள்ள ஊழல் மோச டிகள் தொடர்பாக முறையிடுவதற்காக சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க, இன்று (28.06.2018) பகல் கொழும்பு ஜவாத்தையில் அமைந் துள்ள ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.
இதற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது காணப்படுகின்ற குற்றச்சாட்டு குறித்து பின்வருமாறு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
‘நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்பாக செய்தியை வெளியிட்டமைக்காக இந்த நாட்டு ஊடகவியலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
தர்ஷிகா பெஸ்டியனுக்கும் அதேபோல அந்த செய்தியை எழுதிய மரியா என்ற ஊடகவியலாளருடனும் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு கலந்துரை யாடினேன்.
இச் குற்றச்சாட்டிற்கு மஹிந்த ராஜபக்ச கண்டிப்பாக பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளார்.
இச் செய்தியில் உண்மை இல்லாவிட்டால் மஹிந்த ராஜபக்ச அதேபோல ருவிட்டரில் இச் செய்தி பொய் என பதிவிட்டிருக்கும் நாமல் ராஜபக்ச ஆகி யோரிடம் இலஞ்சம் வாங்காத நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக வழக்கு தொடரவும் முடியும்.
அதேபோல 38 ஆயிரம் டொலர்களை பெற்றுக்கொண்ட தேரர் ஒருவரும் இதில் இருக்கின்றார், குணமுள்ள எல்லவுக்கு அருகிலுள்ள ஒரு தேரரே அவ ராவார். சீனா ஹார்பர் நிறுவனத்தின் ஊடாகவே இந்த கொடுக்கல் வாங்கல் நடைபெற்றிருக்கிறது.
பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ள அந்த நிறுவனம் ஸ்ரீலங்காவின் பொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவு அமைந்துள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தான் உள்ளது.
ஆகவே நிதிமோசடி பிரிவிடமே மேலதிக கடமை காணப்படுகிறது, ஒரு டொலரையேனும் இலஞ்சமாக வாங்கியிருந்தால் கழுத்தை அறுத்து தற் கொலை செய்துகொள்வதாக மஹிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.
மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்காவில் பிரசித்திபெற்ற ஒரு தலைவர் என்றபடியி னால் தயவுசெய்து தற்கொலை செய்துகொள்ள வேண்டாம். பெற்ற பணத்தை மட்டுமே திருப்பிக் கொடுத்துவிட்டால் போதும்.
ஏனென்றால் அலோசியஸிடம் பெற்ற பணத்தை திருப்பி செலுத்த தயாரென சிலர் கூறியிருக்கிறார்கள். கோட்டாபயவும் அருங்காட்சியகம் அமைப்பதாக மோசடி செய்த பணத்தில் பாதியை செலுத்தி விட்டாராம்.
இதேவேளை கொழும்பில் இன்று பகல் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த 6 உறுப்பினர்கள் உட்பட 16 பேர் அடங்கிய குழு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலும் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தி தொடர்பாக கருத்து வெளியிடப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டார் என்றால் அதுகுறித்து விசாரணைகளை நடத்தலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பின்வருமாறு தெரிவித்தார்.
‘தேர்தலுக்காக பணம் கொடுக்கப்பட்டதாக மூன்றரை வருடங்களுக்கு பின்னர் குற்றம் சாட்டப்படுகிறது. அப்படி இடம்பெற்றிருந்தால் அதுதொடர்பில் நடவ டிக்கை எடுக்கலாம் என்றுதான் கூறுகின்றோம். குற்றச்சாட்டுக்களை எப்படி வேண்டுமென்றாலும் முன்வைக்கலாம்.
கடந்த வருடங்களுக்கு முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர் பாக அமெரிக்கா கூறியவையும், இன்று அமெரிக்கா அதிலிருந்து விலகிய பின்னர் கூறுபவையும் வேறுதானே. நியூயோர்க் டைம்ஸ் அல்ல வேறு செய்தி களிலும் இக் காலகட்டத்தில் அதனைப் பெற்று இதனை செய்தார்கள் என்று கூறமுடியும்.
நான் கூறுவது என்னவென்றால் அதனை செய்தார்கள் என்று கூறுவார்களா யின் நாட்டில் சட்டம் ஒன்று உள்ளது தானே. இவ் விசாரணைகளுக்கு எமது ஒத்துழைப்புக்கள் தேவையல்ல என்றுதான் நினைக்கின்றோம். பிக்குகளுக்கு சீத்தைகளை வழங்கியதற்காக கைது செய்தார்கள் என்றால் தேர்தலுக்காக பணம் பெற்றமைக்காக விசாரணைகளை நடத்த முடியுமெனத் தெரிவித்துள் ளாா்.