தேர்தல் செலவினங்களை குறைக்க விசேட சட்டமூலம்
தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது ஏற்படுகின்ற செலவினங்களை குறை த்துக் கொள்வது தொடர்பிலான சட்டமூலமொன்றை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டவல்லுநர் தீபானி குமாரஜீவ தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது ஏற்படுகின்ற செலவினங்களை குறைத்துக் கொள்வது தொடர்பிலான சட்டமூலமொன்றை தயாரிக்கும் பணிகள் சட்டவாக்க திணைக்களத் தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்பகட்ட சட்ட வரைபுகள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வினூடாக வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.
அரசியல் கட்சிகள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்க ளின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தல் செயற்பாடுகளுக்கான செலவினங்களை வரை யறுப்பதற்காகவே மேற்படி சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித் துள்ளாா்.