மஹிந்தவிடம் விசாரணைகளை நடாத்த நடவடிக்கை.!
''த நேஷன்'' பத்திரிகையின் முன் னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடு த்து வைக்கப்பட்டமை, சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக் கப்பட்டமை, கொலை செய்ய முயற் சிக்கப்பட்டமை மற்றும் நொயார் குடு ம்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவ விபரங்களை வெளிப்படுத்திக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விசா ரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனயவுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள் ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைகளில் ஒரு அங்க மாக கடந்த மே மாதம் 22 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பெற்றுக் கொண்ட வாக்கு மூலத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ளவும் மேலதிக தகவல்களை வெளிப்படுத்தவும் இந்த விசார ணைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமை யகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளாா்.
இந் நிலையில் விசாரணைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடம் திகதியொன்று கோரப்பட்டுள்ளதாகவும், அவர் திகதியொன்றினை ஒது க்கி கொடுத்த பின்னர் பெரும்பாலும் அவரது வீட்டிலோ அலுவலகத் திலோ வைத்து இந்த விசாரணை, வாக்கு மூலத்தினைப் பெற்றுக்கொள்ள எதிர்ப் பார்ப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளாா்.
இதனிடையே மிக விரைவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் வக்கு மூலம் பெற்ற பின்னர், அடுத்த கட்டமாக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் உளவுத் துறை பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் கபில ஹெந்தவிதாரன ஆகியோரும் கீத் நொயார் விவகாரத்தில் விசாரணை செய்யப்படவுள்ளதாகவும் அவர்களும் விசாரணை வலயத்துக் குள் இருப்பதாகவும் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளாா்.
அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் கட்டுப்பாட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேராவின் ஆலோசனைக்கு அமைய சமூக கொள்ளை தொடர் பிலான விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா்.