Breaking News

ஐ.தே.க.வை வீழ்த்த வியூகம் வகுப்போம் - சந்திமவீரகொடி

எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த் துவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோ மென  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திமவீர கொடி தெரிவித்துள்ளாா். 

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந் திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவின ரின் எதிர்கால அரசியல் நடவடிக்கை தொட ர்பாக விளக்கமளிக் கையிலேயே இவ்வாறு  மேலும் தெரிவித்துள்ளாா். 

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதிக்கத்தை எதிர்த்தே நாம் பிரதமருக்கு எதிரான நம்பிக் கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தோம். அந்த வகையில் எதிர் வரும் மாகாணசபைகளுக்கான தேர்தலின் போது ஐ.தே.வை தோல்வியடை யச் செய்வதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுப் போம்.  

இந் நிலையில் எதிர்வரும் மாகாணசபை தேர்தலின் போது தேசிய அரசாங்கத் திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 23 பேரும் விலகி வரு வார்களானால் எதிர்காலத்தில் சுந்திரக் கட்சியை பலப்படுத்தி மக்களின் தேவைகளை புரிந்து செயற்படும் செயற்றிறன் மிக்க கட்சியாக மாற்றியமைப் பதற்கான பணிகளை மேற்கொள்வோமெனத் தெரிவித்துள்ளாா்.