ஒரு அங்குலத்தைக்கூட இழக்க மாட்டோம்!
சமாதானத்திற்கு ஆதரவாக செயற்பட சீனா கடமைப்பட்டுள்ள போதிலும், பிரா ந்தியத்தின் ஒரு அங்குலத்தை கூட இழக்க மாட்டோம் என சீனா தெரிவித் துள்ளது.
சீன ஜனாதிபதிக்கும் அமெரிக்க பாது காப்பு செயலாளர் ஜேம்ஸ் மெட்டி ஸுக்கு முடனான கலந்துரையாட லின் போதே சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங் இது தொடர்பிலான கருத்தை தெரிவித்துள்ளாா்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மெட்டிஸ் சீனாவுக்கான உத் தியோகபூர்வ விஜயத்தை முன்னெ டுத்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, சீன ஜனாதிபதிக்கும் மெட்டிஸுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே உருவாகியுள்ள வர்த்தக முரண்பாடுகள் மற்றும் தென் சீன கடற்பரப்பு குறித்த சர்ச்சைகள் நீடித்து வருகின்ற நிலையிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த ஜேம்ஸ் மெட்டிஸ், சீன ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுடன் பீஜிங்கில் நடைபெற்ற சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீனாவுடனான இராணுவ உறவை வலுப்படுத்த முக்கியத்துவம் வழங்கப்படுவது குறித்து அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறதா கவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இச் சந்திப்பு தொடரபில் கருத்துத் தெரிவித்த சீன ஜனாதிபதி, ”சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நோக்கங்களை நாம் கொண்டுள்ளோம், எனினும் நம் மூதாதையர்கள் விட்டுச்சென்ற இப் பிராந்தியத்தின் ஒரு அங் குலத்தையேனும் இழப்பதற்கு நாம் தயாராக இல்லையெனத் தெரிவித்துள் ளார்.